ஹோட்டலுக்கு பின்னாடி உஷ் உஷ்! போய் பார்த்தால்.. கனவிலும் நினைத்துப் பார்க்காத காட்சி! ஷாக் வீடியோ!
ஜெய்ப்பூர்: பாம்பை கண்டால் படையே நடுங்கும் என ஒரு பழமொழி இருக்கிறது. ஆனால் பாம்புகளே ஒரு படை போல் வந்தால் எப்படி இருக்கும். ராஜஸ்தானில் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பிரபலமான ஹோட்டல் ஒன்றின் தோட்டத்தில் ஒரு பாம்பு வந்த நிலையில் அதனை பிடிக்க முயன்ற போது அடுத்தடுத்து பாம்புகள் வந்தது. ஒன்றல்ல இரண்டல்ல 18 நாகப் பாம்புகள் அடுத்தடுத்து வந்து படம் எடுத்த நிலையில் தலை தெறிக்க ஓடி உள்ளனர் வாடிக்கையாளர்கள்.
வட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் குடியிருப்பு பகுதிகளில் விஷ ஜந்துக்கள் வருவது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக மழை காரணமாக பாம்புகள், முதலைகள் உள்ளிட்டவை சர்வ சாதாரணமாக குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன.
ராஜஸ்தானிலும் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ஹோட்டலின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பாம்பை பிடிக்க முயன்ற போது அடுத்தடுத்து 18 நாகப்பாம்புகள் வந்திருக்கிறது. உதய்பூர் மாவட்டம் சோமஸ்ராம் நகரத்தில் பிரபலமான ஹோட்டலில் பின்பகுதியில் தோட்டம் அமைந்திருக்கிறது.

அந்த தோட்டத்தில் பாம்பு இருப்பதைக் கண்ட ஊழியர்கள் ஒருவர் இது தொடர்பாக பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்கும் சமன் சிங் சவுகானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குப்பைகளை அகற்றிவிட்டு அங்கிருக்கும் ஒரு பாம்பை பிடிக்க அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம் ஒரு பெரிய நாகப் பாம்புடன் 18 நாகப் பாம்புகள் அங்கு இருந்தது. ஒட்டுமொத்தமாக கூட்டத்தை பார்த்ததும் அனைத்து பாம்புகளும் படம் எடுத்து சீறி நின்றன.
एक साथ 18 कोबरा स्नेक को देखकर रोंगटे खड़े हो गए...स्नेक कैचर चमन सिंह ने सुरक्षित रेस्क्यू किया...#उदयपुर की होटल में मिला सांपों का झुंड.#Udaipur #snake #snakecatcher #resque #hotel_garden #kobra #कोबरा pic.twitter.com/bNPBW7dICX
— Kapil Shrimali (@KapilShrimali) July 21, 2025
இதனால் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் தலை தெறிக்க ஓடினர். தொடர்ந்து சமன் சிங் சவுகானின் ஊழியர்கள் அந்த பாம்புகளை ஒவ்வொன்றாக பிடித்து வனப்பகுதியில் விட எடுத்துச் சென்றனர். பொதுவாக நாகப்பாம்புகள் ஒரே நேரத்தில் 10 முதல் 20 முட்டைகளை இடும். முட்டையிலிருந்து பாம்புகள் வெளிவந்ததும் சில குட்டி பாம்புகளை தாய் நாகம் தின்று விடுமாம். ஆனால் இங்கு பிடிக்கப்பட்ட தாய் பாம்பு குட்டிகளை சாப்பிடாமல் அனைத்து குட்டிகளையும் வளர்த்திருக்கிறது. சமீபத்தில் தான் அந்த பாம்புகள் முட்டையிலிருந்து வெளி வந்திருக்க வேண்டும். கொடிய விஷத்தை கொண்ட இந்த நாகப் பாம்புகள் முட்டையிலிருந்து வரும்போது வீரியமிக்க விஷத்தை கொண்டிருக்கும். தற்போது இந்த பாம்புகள் பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட இருக்கிறது என்றார்.
ஒரே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட நாகப்பாம்புகள் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாம்புகள் இருந்தால் அவற்றை அடிக்காமல் அருகில் உள்ள தீயணைப்புத் துறையினர் அல்லது வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது..
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications