விடாத கனமழை... வெள்ளக்காடானது ராஜஸ்தான்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சுரு, பிலானி, சிகர், ஜெய்ப்பூர், அஜ்மீர், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்துள்ளது..

இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாலைகள் சேதமடைந்துள்ளன.
சுருவில் தெருக்களில் முழங்கால் அளவுக்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது. மேலும் வீடுகள், கடைகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. தங்கள் வீடுகளுக்குள் தேங்கியுள்ள நீரை மக்கள், வாளிகள் மூலம் இறைத்து வெளியேற்றி வருகின்றனர்.

அதே சமயம் கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரில் கலந்துள்ளது. இதனால் தெருக்கள் சகதியாக காணப்படுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.
இந்நிலையில் மாநிலத்தின் சில பகுதிகளில் மேலும் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications