ராஜஸ்தானில் திருப்பம்.. ஆகஸ்ட் 14ம் தேதி கூடுகிறது சட்டசபை.. ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டசபையை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார். ஆகஸ்ட் 14ம் தேதி சட்டசபையை கூட்ட ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு சட்டசபையை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக முயன்று வருகிறார்.

தனக்கு மொத்தம் 102 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதனால் உடனே சட்டசபையை கூட்ட வேண்டும் என்று அவர் திட்டமிட்டு வருகிறார்.அதேபோல் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை உடனே தகுதி நீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.
ஆனால் சட்டசபையை கூட்ட தொடர்ந்து ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா முட்டுக்கட்டை போட்டு வந்தார். இதற்காக ஆளுநரிடம் இரண்டு முறை அவர் கோரிக்கையும் வைத்தார் . ஆனால் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இந்த கோரிக்கையை இரண்டு முறையும் ஏற்கவில்லை.
சட்டசபையை இப்போது அவசரமாக கூட்ட எந்த காரணமும் இல்லை. முதல்வர் அசோக் கெலாட் இதற்கான காரணத்தை சொல்லவில்லை என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்து வந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு அல்லது முறையான வேறு காரணம் எதையாவது குறிப்பிட்டால், உடனே சட்டசபையை கூட்ட அனுமதிக்கிறேன் என்று ஆளுநர் குறிப்பிட்டு இருந்தார்.
இல்லையென்றால் 21 நாட்கள் நோட்டிஸ் அனுப்பி அதன்பின்தான் சட்டசபையை கூட்ட முடியும் என்று ஆளுநர் குறிப்பிட்டு இருந்தார். இன்று காலை வரை ஆளுநர் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் முதல்வர் அசோக் கெலாட் சட்டசபையை கூட்ட ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.
புதிய அமைச்சரவை பரிந்துரையை ஆளுநருக்கு முதல்வர் அசோக் கெலாட் அனுப்பினார்.இந்த நிலையில், தற்போது ராஜஸ்தானில் சட்டசபையை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார். ஆகஸ்ட் 14ம் தேதி சட்டசபையை கூட்ட ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
முறையான சமூக இடைவெளியுடன் சட்டசபையை நடத்த வேண்டும் என்று ஆளுநர் அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications