Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜஸ்தான் பாஜகவில் பூகம்பம்? வசுந்தர ராஜே வீட்டுக்கு படையெடுத்த எம்.எல்.ஏக்கள்- கதி கலங்குது டெல்லி!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவி தமக்கு கிடைக்காவிட்டால் பாஜக டெல்லி மேலிடத்துக்கு எதிராக கலகம் எழுப்புவதற்கு முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா தயாராகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வசுந்தர ராஜே சிந்தியாவை பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் சந்தித்து தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதால் டெல்லி மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றன. பாஜக 115 இடங்களில் வென்று ஆட்சியை காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 69 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

Rajasthan: Vasundhara Raje gears to revolt against BJP for CM Post?

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் முதல்வர் யார் என்ற பிரச்சனை பாஜகவில் வெடித்தது. டெல்லி மேலிடத்தைப் பொறுத்தவரையில் வசுந்தர ராஜே சிந்தியாவை முதல்வராக்க விரும்பவில்லை. டெல்லி மேலிடத்தின் கட்டளைக்கு இணங்காமல் சுதந்திரமாக இருக்க விரும்புகிற குவாலியர் மகாராணி வசுந்தர ராஜே சிந்தியா. அதனால்தான் அவரை ஓரம்கட்ட முடிவு செய்தனராம் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும். வசுந்தர ராஜே சிந்தியாவுக்கு பதில் சாமியார் பாலக்நாத்தை முதல்வராக்கவே டெல்லி விரும்புகிறதாம்.

ஆனால் டெல்லி மேலிடம் சட்டசபை தேர்தலின் போதும் தம்மை புறக்கணித்தது; தற்போது வெற்றி பெற்ற பின்னரும் புறக்கணிக்கிறது.. இதற்கு பழிவாங்காமல் விடப் போவதும் இல்லை- முதல்வர் பதவியை ஒருபோதும் விட்டுத் தரப் போவதும் இல்லை என்பதில் வசுந்தர ராஜே சிந்தியா திட்டவட்டமாக இருக்கிறாராம். ஏற்கனவே தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலரையும் 'கட்டுப்பாட்டில்' வைத்திருக்கிறார் வசுந்தர ராஜே சிந்தியா. சில எம்.எல்.ஏக்களை அவரது மகன் துஷ்யந்த் ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைத்ததும் சர்ச்சையானது.

டிசம்பர் 3-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையிலும் முதல்வர் யார் என்பதை பாஜக முடிவு செய்யாமல் தத்தளிப்பது கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்திருக்கிறது. இதனால் முதல்வர் யார் என்பதை தீர்மானித்தாக வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது. இந்த நிலையில் திடீரென ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் இன்று வசுந்தர ராஜே சிந்தியா வீட்டுக்கு அடுத்தடுத்து படையெடுத்தனர். பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் வசுந்தர ராஜே சிந்தியா பக்கமே இருக்கின்றனர். ஒருவேளை தமக்கு முதல்வர் பதவியை பாஜக தர மறுத்தால் கணிசமான எம்.எல்.ஏக்களுடன் பாஜக மேலிடத்துக்கு எதிராக கலகத்தில் இறங்கவும் வசுந்தர ராஜே சிந்தியா தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் டெல்லி பாஜக மேலிடம் அதிர்ந்து போயுள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+