Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய நபர் திடீரென விஷம் குடித்து தற்கொலை முயற்சி! காதலி மரணம்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

முசாபர்நகர்: பிரபல கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த 2022ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய போது அவரை சரியான நேரத்தில் காப்பாற்றியவர்களில் ஒருவர் ரஜத் குமார். இதற்காக அப்போதே பலரும் அவரை பலரும் பாராட்டி இருந்தனர். இதற்கிடையே ரஜத் குமார் இப்போது திடீரென தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு பிரபல கிரிகெட் வீரரான ரிஷப் பண்ட் டெல்லி-டேராடூன் சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது விபத்தில் சிக்கினார். மிக மோசமான விபத்தாக அது இருந்தது..

Uttarakhand India

ரிஷப் பண்ட் உயிரைக் காப்பாற்றியவர்:

டெல்லி- டேராடூன் சாலையில் உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி என்ற பகுதியில் இந்த விபத்து அரங்கேறியது. நள்ளிரவில் நடந்த இந்த சாலை விபத்தில் ரிஷப் பண்டிகிற்கு மிக மோசமான காயம் ஏற்பட்டது. இருப்பினும், அங்கிருந்து சிலர் அவரை தக்க நேரத்தில் காப்பாற்றினார். இதன் காரணமாகவே அவரால் உயிர் தப்ப முடிந்தது. அதன் பிறகு தீவிர முயற்சிக்குப் பிறகு அவர் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பியது தனிக்கதை.

ஆனால், அந்த நள்ளிரவு நேரத்தில் ரிஷப் பண்ட் உயிரைக் காப்பாற்றியதில் முக்கியமானவர் 25 வயதான ரஜத் குமார். அப்போதே அவரை பண்ட் தொடங்கி பலரும் நேரில் அழைத்துப் பாராட்டி இருந்தனர். இதற்கிடையே இந்த ரஜத் குமார் திடீரென இப்போது தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தனது காதலியுடன் இணைந்து திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.

தற்கொலை முயற்சி:

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள புச்சா பஸ்தி என்ற கிராமத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ரஜத் குமாரும் அவரது 21 வயது காதலியான மனு காஷ்யப்பும் ஒன்றாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களின் காதலுக்கு அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதில் காதலியான மனு காஷ்யப் உயிரிழந்துவிட்ட நிலையில், ரஜத் குமார் இப்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியு பிரிவில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்ன காரணம்:

இருவரும் காதலித்து வருவது குடும்பத்தினருக்குத் தெரியும். இருப்பினும், அவர்கள் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்தினர் காதலை ஏற்கவில்லை. மேலும், வேறு நபருடன் திருமணம் செய்து வைக்கவும் தயாராகி உள்ளனர். இதன் காரணமாகவே தற்கொலை முடிவை அவர்கள் எடுத்ததாக தெரிகிறது.

அதேநேரம் காஷ்ய தாய் தனது மகளின் மரணத்திற்கு ரஜத் குமார் தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டுகிறார். ரஜத் குமார் தான் தனது மகளைக் கடத்தி வலுக்கட்டாயமாக பாய்சன் கொடுத்து இருக்கலாம் என்றும் ரஜத் குமாரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+