ரூ.5,000 மினிமம் பேலன்ஸ்... எஸ்பிஐ அறிவிப்பில் மத்திய அரசு தலையிட எம்.பிக்கள் வலியுறுத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் ரூ.5,000-த்தை குறைந்தபட்ச வைப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று ராஜ்யசபா உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரு நகரங்களில் (மெட்ரோபாலிட்டன்) வாழ்பவர்கள் ரூ. 5000-மும், நகரங்களில் வாழ்பவர்கள் ரூ.3000 -மும், சிறுநகர்களில் வசிப்போர் ரூ.2000-மும் கிராமப்புறங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1000-மும் வைப்புத் தொகையையும் வைத்திருக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.

Rajya Sabha MPs Urge Govt To Intervene In SBI's New ₹5,000 Minimum Balance Requirement

மேலும், இந்தத் தொகையில் 50-75% குறைந்தால், ரூ. 75 அபராதமும் சேவை வரியும் வசூலிக்கப்படும். 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால், ரூ. 50 மற்றும் சேவை வரி வசூலிகப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஒரு சிலர் மொத்தம் ஊதியமும் ரூ.5000 அல்லது ரூ.6,000 வாங்கும்பட்சத்தில் செலவுக்கு என்ன செய்வது என்றும் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக ராஜ்யசபா இன்று கூடியதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கே.கே.ராகேஷின் எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில் ஏழைகளின் பணத்தில் வங்கி தனது பொருளாதார பிரச்னைகளை தீர்த்து கொள்வதே அந்த வங்கியின் நோக்கம் போல் தெரிகிறது.

நாட்டிலேயே மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியே இதபோல் செயல்பட்டால் மற்ற வங்கிகளும் இதுபோன்று கட்டணங்களை அமல்படுத்தும். இதனால் வாடிக்கையாளர்கள் அதிலும் குறிப்பாக ஏழைகள்தான் பாதிக்கப்படுவர். ஏழைகள் வங்கிக் கணக்குகளை ஏற்படுத்தி, மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கேற்ப அவர்கள் ரொக்கமில்லா பொருளாதாரத்துக்கு மாறிவருகின்றனர்.

அரசின் அறிவுறுத்தலை மதித்தவர்களை தண்டிப்பதாக உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றார் அவர்.உறுப்பினரின் இந்த கோரிக்கையை மற்ற உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
State Bank of India's new rule requiring savings account holders to maintain a minimum balance of Rs 5,000 has drawn sharp criticism from some Rajya Sabha MPs, who have urged the government to intervene in the matter.
Please Wait while comments are loading...