ராமர் கோவிலை பார்த்ததும் ஹெலிகாப்டரில் இருந்து மோடி செய்த சம்பவம்! வீடியோ
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்த பிரதமர் மோடி ராமர் கோவிலை பார்த்ததும் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரில் இருந்து செய்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
2019ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு பிரதமர் மோடி கடந்த 2020 அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கோவில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.

மொத்தம் 3 அடுக்குகளாக இந்த கோவில் கட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது முதல்தளத்தின் பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடங்கி நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று சடங்குகளை செய்து வருகிறார்.
தமிழக தம்பதிக்கு கவுரவம்..மோடியுடன் சேர்ந்து ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யும் ஆடலரசன்..யார் இவர்?
முன்னதாக கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை 10.25 மணிக்கு அயோத்தி விமான நிலையத்துக்கு வந்தார். அதன்பிறகு அவர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் காலை 10.55 மணிக்கு ஸ்ரீராமஜென்ம பூமிக்கு பிரதமர் மோடி வந்தார். இந்த வேளையில் தான் அயோத்தி ராமர் கோவில் மற்றும் அயோத்தி நகரின் அழகை பார்த்ததும் மோடி மகிழ்ச்சியடைந்தார்.
अयोध्या में आगमन के समय प्रधान मंत्री श्री @narendramodi जी द्वारा राममय अयोध्या नगरी की ली गई अद्भुत वीडियो।#RamMandirPranPrathistha #Ayodhya pic.twitter.com/Q7665MYndG
— Tuhin A. Sinha तुहिन सिन्हा (@tuhins) January 22, 2024
இதையடுத்து அவர் தனது ஹெலிகாப்டரில் இருந்து செல்போனை எடுத்து அயோத்தி நகர், ராமர் கோவிலை வீடியோவாக எடுத்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பனிமூட்டத்துக்கு நடுவே ராமர் கோவில், அயோத்தி நகர் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications