ராகுல் குறித்து சர்ச்சை பேச்சு... மே 16 வரை லக்னோவில் பொதுக்கூட்டம் நடத்த ராம்தேவுக்கு தடை
லக்னோ: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த யோகா குரு ராம்தேவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் மே 16 ஆம் தேதி வரை லக்னோவில் பொதுகூட்டங்கள் நடத்த அந்நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ராகுல் காந்தி தேனிலவு செல்வது போல் தலித் வீடுகளுக்கு சென்று வருகிறார் என்ற வகையில் பேசியிருந்தார் ராம்தேவ். இதற்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ராம்தேவ் மன்னிப்பு கோரும்படி வலியுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உத்திரப்பிரதேச போலீசார் ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹபிபுல் ஹசனகூறுகையில், "ராம்தேவின் பேச்சு பதிவு செய்யப்பட்ட வீடியோவை போலீஸார் ஆய்வு செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்" என்றார்.
இதற்கிடையே தலித் மற்றும் ராகுல் குறித்த தனது கருத்துக்கு ராம்தேவ் வருத்தம் தெரிவித்தார். தனது கருத்து தலித்துகளுக்கு எதிரானது அல்ல என அவர் மன்னிப்பும் கேட்டார். ஆனபோதும், ராம்தேவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்களும், தலித் இயக்கங்களை சேர்ந்தோரும் உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் பல இடங்களில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாபா ராம்தேவ், வரும் மே 16ம் தேதி வரை அதாவது லோக்சபா தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் நாள் வரை லக்னோவில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை லக்னோ நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications