நடிகை ரஞ்சிதா இனி சன்னியாசி ‘மா ஆனந்தமயி’- நித்தியானந்தாவிடம் தீட்சைப் பெற்றார்!
பெங்களூர்: நடிகை ரஞ்சிதா பெங்களூர் அருகே பிடுதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்று சன்னியாசி ஆனார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்தியானந்தாவுடன் ஆபாசமாக இருந்ததாக வெளியான வீடியோ காட்சிகளால் சர்ச்சையில் சிக்கினார் நடிகை ரஞ்சிதா. அது குறித்தானக் காட்சிகள் சில தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப் பட்டு பரபரப்பைக் கிளப்பின.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டக் காட்சிகள் போலியானவை என நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா தரப்பு விளக்கமளித்தன. இந்நிலையில் நித்தியானந்தாவின் பிறந்த தினமான நேற்று அவரிடம் தீட்சைப் பெற்று சன்னியாகி ஆகியுள்ளார் ரஞ்சிதா.

அறிமுகம்....
கடந்த 1992ம் ஆண்டு கார்த்திக் ஜோடியாக நாடோடி தென்றல் படம் மூலம் டைரக்டர் பாரதிராஜாவினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரஞ்சிதா. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் பல முண்ணனி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார்.

ஆன்மீக வாழ்க்கை...
திரைத் துறையில் இருந்து அவரது கவனம் சிறிது சிறிதாக ஆன்மீகத்தில் ஈடுபடத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, பெங்களூர் அருகே பிடுதியில் நித்யானந்தா நடத்தி வரும் ஆசிரமத்திற்கு சென்று சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார்.

ஆபாச வீடியோ...
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தா-நடிகை ரஞ்சிதா தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமறைவு...
இதையடுத்து நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். ரஞ்சிதா சிலகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பின்னர், தொலைபேசி வாயிலாகவும், அதனைத் தொடர்ந்து நேரிலும் தன் மீது சுமத்தப் பட்ட பழி குறித்து விளக்கமளித்தார்.

மறுப்பும்...மன்னிப்பும்
இது தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரணையில் தொடர்ந்து இருந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி நித்தியானந்தா-ரஞ்சிதா குறித்தான சித்தரிக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் மறுப்பும், மன்னிப்பும் கேட்டு ஒளிபரப்பியது.

நித்தியானந்தா பிறந்ததினம்...
இந்நிலையில் நித்தியானந்தாவின் பிறந்த தினத்தையொட்டி பெங்களூர் அருகே பிடுதியில் உள்ள அவரது ஆசிரமத்தில் நேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவரது சீடர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சன்னியாசி...
அப்போது நித்தியானந்தாவிடம் இருந்து தீட்சை பெற்று நடிகை ரஞ்சிதா சன்னியாசி ஆனார். அதனை தொடர்ந்து நடிகை ரஞ்சிதா, இனி "மா ஆனந்தமயி" என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எதிர்ப்பு...
அவருடன் மேலும் சில பெண் சீடர்களும் சன்னியாசியாகி தீட்சை பெற்றனர். நடிகை ரஞ்சிதா சன்னியாசியாகி தீட்சை பெற்றதற்கு கர்நாடகத்தை சேர்ந்த பல மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தியாக மனோபாவம்...
சன்னியாசி தீட்சை பெறுவது என்பது சுலபமானது அல்ல. தியாக மனோபாவம் இருக்க வேண்டும். அதற்கென்று சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளன. அவை எல்லாம் கடைப்பிடிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications