'ரஸ்னா' பாப்பாவுக்கு 28ம் தேதி கல்யாணமாகிடுச்சுன்னு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐ லவ் யூ ரஸ்னா என்று ரஸ்னா விளம்பரத்தில் கொஞ்சி கொஞ்சி பேசிய அன்கிதா ஜாவேரிக்கும் விஷால் ஜகதாப் என்பவருக்கும் கடந்த 28ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

1980களில் வெளியான ரஸ்னா விளம்பரம் மிகவும் பிரபலமானது. அந்த விளம்பரத்தில் ஒரு சிறுமி வந்து ஐ லவ் யூ ரஸ்னா என்று கூறிய அழகை பலரும் மறந்திருக்க முடியாது. அந்த ரஸ்னா பாப்பா வேறு யாரும் இல்லை நடிகை அன்கிதா ஜாவேரி தான்.

ஆம், ரஸ்னா பாப்பா வளர்ந்த பிறகு நடிகையாகிவிட்டார்.

நடிகையா?

நடிகையா?

என்னாது ரஸ்னா பாப்பா நடிகையாகிவிட்டாரா என்று வியக்க வேண்டாம். தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாகிய அவர் பிரசாந்த் நடித்த லண்டன் படம் மூலம் கோலிவுட் வந்தார். தகதிமி தா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

ஓ, லண்டன் படத்தில் பெரிய கண்களுடன் வந்த அந்த காந்தக் கண் அழகி ரஸ்னா பாப்பாவா என்று கேட்டால் ஆம் என்பது தான் பதில். அவருக்கும் ஜே.பி. மார்கன் நிறுவனதத்தின் துணை தலைவர் விஷால் ஜகதாபுக்கும் கடந்த 28ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

கணவர்

கணவர்

அன்கிதாவின் கணவர் விஷால் கனடாவை சேர்ந்தவர். அவர்களுக்கு இந்து முறைப்படி மும்பையில் தான் திருமணம் நடந்துள்ளது. அன்கிதா கடந்த சில ஆண்டுகளாகவே படங்களில் நடிக்காமல் வெளிநாட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள்

பிரபலங்கள்

அன்கிதா ஜுனியர் என்.டி.ஆர், பாலகிஷ்ணா, ரவி தேஜா உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்த போதிலும் அவரது திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் யாரையுமே அழைக்கவில்லை. தனது குடும்பத்தார், நண்பர்களுடன் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+