இந்தி நடிகர் ரவி கிஷனின் மகள் மாயம்: போலீசில் புகார்
மும்பை: பாலிவுட் மற்றும் போஜ்புரி நடிகர் ரவி கிஷன் தனது மகளை காணவில்லை என்று மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாலிவுட் மற்றும் போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் ரவி கிஷன்(44). சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டுள்ளார். அண்மை காலமாக அவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

படங்கள் தவிர அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். அவரது மனைவி பிரீத்தி. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரவி மும்பை போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
தனது 19 வயது மகளை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியின் மகளை தேடி வருகிறார்கள். ரவியின் மகள் முன்பும் ஒரு முறை வீட்டை விட்டு வெளியேறியதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications