என்னதிது.. நடு ரோட்டுல வெள்ளையா.. பேயா இருக்குமோ.. நானே வருவேன்.. கேரள காட்டிலிருந்து ஒரு அலறல்!
வயநாடு அருகே 8 அடி உயர வெள்ளை உருவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Recommended Video
வயநாடு: "அது என்ன வெள்ளையா ஒரு உருவம்.. இப்படி நகர்ந்து போகுதே.. பேயா, பிசாசா?" என்ற கேள்வி கேரளாவையும் தாண்டி மக்களை அச்சத்துடன் கேள்வி எழுப்பி வருகிறது.
பேய் இருக்கா, இல்லையா என்ற கேள்விக்கு நமக்கு எந்த யுகத்திலும் பதில் கிடைக்க போவது இல்லை. ஒரு பக்கம் விஞ்ஞானம் இல்லை என்கிறது.. மறுபக்கம் அதற்கான சாட்சிகள் ஏதாவது ஒரு ரூபத்தில் நடமாடி கொண்டே இருக்கிறது.

இப்போதும் ஒரு உருவம் நம் பார்வைக்கு வந்துள்ளது. இது கேரள மாநிலம் வயகாட்டில் நடந்துள்ளது சம்பவம். பொதுவாக, பில்லி, சூனியம், மாந்திரீகம் போன்றவைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் கேரள மாநிலத்தினர். சில சமயம், இங்குள்ள பகுதிகளில் ஆங்காங்கே பேய் நடமாட்டம் இருப்பதாக கூட செய்திகள் வெளிவருவது உண்டு.
அந்த வகையில், வயநாட்டில் பய்யாவூர் என்ற இடத்தில் ஒரு அமானுஷ்ய பெண் ரூபத்தின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது.
அது ஒரு ராத்திரி நேரம்.. பய்யாவூர் என்ற இடத்தில் செங்கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அந்த வண்டியில் கேமராவும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரெண்டு பக்கமும் மரங்கள், செடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கின்றன.
குறுகலான தெருபோல, மண் சாலை உள்ளது. லாரியில் 2 பேர் பேசிக் கொண்டே வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஒரு வெள்ளை உருவம் திடீரென அந்த பக்கம் புதருக்குள் இருந்து வெளியே வருகிறது. 8 உயரத்துக்கு அந்த உருவம் உள்ளது.
அமானுஷ்ய பெண் உருவம் அது.. முழுக்க முழுக்க வெள்ளை உருவம்.. தலையை காணோம்.. மொத்தமாக வெள்ளை துணி போர்த்தியபடி உள்ளது. அந்த துணி மண்ணெல்லாம் புரண்டு வருகிறது. வெளிச்சம் பளிச்சென வீசுகிறது. ஒரு லாரி வருகிறதே என்றெல்லாம் தெரியவில்லை.. கூலாக அந்த பக்கத்தில் இருந்து மண் சாலையை கடந்த இந்த பக்கத்தில் நடந்து போகிறது.
இது பேயா, பிசாசா என்று தெரியவில்லை. இந்த வீடியோதான் வைரலாகி.. பீதியை கிலோ கணக்கில் கிளப்பி விட்டு கொண்டிருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications