ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
ஹைதராபாத்: செம்மரம் வெட்ட வந்ததாக, ஆந்திரா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 32 தமிழர்களின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் செம்மரம் வெட்டுவதற்கு தமிழர்கள் வருவதாக அம்மாநில செம்மரம் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஆந்திரப் போலீசார் தீவிரச் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த தமிழர்கள் 32 பேரை, ஆந்திர மாநில போலீசார், செம்மரம் வெட்ட வந்துள்ளதாக கூறி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழர்கள் 32 பேர் மீதும் 6 பிரிவுகளில் ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். அவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனு கடந்த 10ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் ஜாமீன் கேட்டு திருப்பதி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணை முடிவடையாத நிலையில், அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
திருப்பதி சேஷாசல வனப்பகுதியில், செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாகக் கூறி, கடந்த ஆண்டு தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் மீண்டும் தமிழர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications