For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜியோவுக்கு போட்டியாக கைகோர்த்தது ரிலையன்ஸ் - ஏர்செல் நிறுவனங்கள் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைவதாக அறிவித்துள்ளன. இந்திய தொலைத்தொடர்புத் துறையில் இது மிகப்பெரிய இணைப்பாகும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது அதிகவேக 4ஜி மற்றும் இதர தொலைத்தொடர்பு சேவைகளை கடந்த 5 ஆம் அறிமுகப்படுத்தியது. இலவச அழைப்புகள், ரோமிங் கட்டண ரத்து, குறைந்த கட்டணத்தில் 4ஜி என பல்வேறு சலுகைகளை ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது ஜியோ 4ஜி சேவையில் அதிரடியாக அறிவித்தது.

Reliance Communications-Aircel merger deal sealed: Sources

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடிகளை சமாளிக்கும் விதமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைவதாக அறிவித்துள்ளன. இரு நிறுவனங்கள் இணைவதால் இந்திய தொலைத் தொடர்பு துறையில் புதிய ஒருங்கிணைப்பாக இது கருதப்படுகிறது.

.

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதன் மூலம் அந்நிறுவனங்களின் மொத்த மதிப்பு சுமார் 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என கருதப்படுகிறது. அதேசமயம், இரு நிறுவனங்களுக்கும் சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஏர்டெல் 25 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. வோடோபோன் நிறுவனத்திற்கு 20 கோடி வாடிக்கையாளர்களும் ஐடியா நிறுவனத்திற்கு 17.5 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர். தற்போது ரிலையன்ஸ், ஏர்செல் இணைப்பின் மூலம் 19 கோடி வாடிக்கையாளர்களுடன் மூன்றாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் இவை திகழும்.

English summary
The merger between Indian telecom operators Reliance Communications and Aircel has likely been approved.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X