இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை: சொல்வது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
டெல்லி: இந்தியாவில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்கிற கேள்விக்கே இடமில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
நாக்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பகவத் பேசுகையில், "இந்தியாவில், இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்கிற கேள்விக்கே இடமில்லை, இதுவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தாகும். நீண்ட காலமாக சமூக பாகுபாடு நிலவி வரும் இந்திய சமூகத்தில் இட ஒதுக்கீடு தொடரும். சமுதாயத்தின் பன்முகத் தன்மைக்கு மதிப்பு கொடுத்து இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். ஆனாலும் இந்துத் துவத்தின் தத்துவங்கள் மற்றும் உணர்வுகளை பின்பற்ற வேண்டும்." என்றார்.

இடஒதுக்கீடு என்பதை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகின்றனர். இதனை முடிவுக்குக் கொண்டுவர இடஒதுக்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன் அரசியல் சாராத ஒரு குழுவை அமைத்து யாருக்கு இடஒதுக்கீடு தேவை? எவ்வளவு காலத்துக்கு தேவை என்பது குறித்து ஆராய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட இன மக்களின் போராட்டத்திற்கு பணிந்து இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டால், இடஒதுக்கீடு அரசியலாக்கப்பட்டு விடும். அதேபோல் கல்வி திட்டத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டும். என மோகன் பகவத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். மோகன் பகவத்தின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications