இன்று நள்ளிரவு வரை இணைய வழி பண பரிமாற்றத்துக்கு அனுமதி: ரிசர்வ் பேங்க் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: வங்கி ஆண்டுக் கணக்குகளை முடிப்பதற்காக வங்கி சேவைகள் நாளை நிறுத்தப்படும் நிலையில், இன்று நள்ளிரவு வரை இணையவழி பண பரிமாற்றத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது
வங்கிக் கணக்குகளை முடிக்கும் வகையில் ஆண்டுதோறும், ஏப்ரல் முதலாம் தேதி வங்கி சேவைகள் நிறுத்தப்படும்.

இந்நிலையில், பொதுமக்கள் வங்கி சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், நாட்டில் உள்ள வங்கிகள் அனைத்தும் இன்று (மார்ச் 31) இரவு 8 மணி வரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதேபோல, அனைத்து மின்னணு பரிமாற்றங்களும் (National Electronic Funds Transfer (NEFT) நள்ளிரவு (12 மணி வரை) அனுமதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications