ஜம்மு அட்டாக்! கையில் இருந்த M4 carbine! அமெரிக்காவின் நவீன துப்பாக்கி! தீவிரவாதிகளிடம் போனது எப்படி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் உள்ள பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் பல விதமான சந்தேகங்களை, விவாதங்களை எழுப்பி உள்ளன.
தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் குழு தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.

பஹல்காம் தாக்குதலில் 4 முதல் 6 பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக உயர்மட்ட உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் மூன்று வெளிநாட்டினர் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர் ஒருவர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அந்த இடத்தில் இருந்து M4 மற்றும் AK-47 தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
துப்பாக்கி
இதில் AK-47 உலக அளவில் கள்ள மார்க்கெட்டில் கிடைக்க கூடியது. பல நாடுகளிடம் இருக்க கூடிய துப்பாக்கிதான். பாகிஸ்தானிடமும் AK-47 துப்பாக்கிகள் உள்ளன. பல தீவிரவாத அமைப்புகளும் AK-47 துப்பாக்கிகளை வைத்துள்ளனர்.
ஆனால் M4 துப்பாக்கி அவ்வளவு எளிதாக கிடைக்காது. பெனெல்லி M4 என்பது இத்தாலிய துப்பாக்கி உற்பத்தியாளர் Benelli Armi SpA ஆல் தயாரிக்கப்பட்ட ஒரு பாதி தானியங்கி ஷாட்கன் ஆகும். அதேபோல் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட M4 carbine துப்பாக்கிகளும் இதே மாடல் மற்றும் தொழில்நுட்பத்தில் இயங்க கூடியது. 1998 இல் வடிவமைக்கப்பட்ட M4, இத்தாலி, அமெரிக்கா மற்றும் யு.கே ஆகிய நாடுகளின் ஆயுதப் படைகளால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதில் சில கைமாறி கள்ள சந்தைகளில் கிடைக்கும். இவை மிகவும் நவீன துப்பாக்கிகள்.
1 நிமிடத்தில் 700-970 ரவுண்டுகள் தோட்டாக்களை சுடக்கூடிய அமெரிக்க தயாரிப்பான M4 கார்பைன் தாக்குதல் துப்பாக்கிகள் மிகவும் அபாயகரமானது. இந்த தோட்டாக்கள் எந்த வாகனத்தையும் எளிதில் துளைக்க முடியும். எளிதாக 500-600 மீட்டர் சுடக்கூடியது. M4 carbine துப்பாக்கிகள் சமீபத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த ரெய்டில் இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது. இவை எப்படி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைகளுக்கு வந்தது என்று அப்போதே விசாரணை செய்யப்பட்டது. இப்போது அதே துப்பாக்கிகள் காஷ்மீர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
என்ன நடந்தது?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கு வழியாக சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 27 பேரை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் வழிமறித்து மிக கொடூரமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செல்வார்கள். இந்நிலையில் இன்று மாலை பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே சுற்றுலா பயணிகளை சரமாரியாக சுட்டுள்ளனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பு பஹல்காமில் நடந்த இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. முக்கியமாக ஒவ்வொருவரையும் சுடும் முன் அவர்கள் இந்துக்களா என்பதை உறுதி செய்ய கீழாடையை உருவி பார்த்துவிட்டு சுட்டுக்கொன்றுள்ளனர்.
முக்கியமாக சில தாக்குதல்களில் சரியாக குழந்தைகளோடு இருக்கும் கணவன் - மனைவிகளில், கணவனை மட்டும் குறி பார்த்து சுட்டு உள்ளனர். அதிலும் பெண் ஒருவரை சுடாமல்.. நான் ஏற்கனவே பல பெண்களை சுட்டுவிட்டேன். உன்னை விடுகிறேன். நீ போய் மோடியிடம் இதை சொல் என்று திமிராக பேசி உள்ளனர். சுடப்பட்ட ஆண்கள் எல்லாம் இந்துக்கள் தானா என்பதை உறுதி செய்த பின்பே தாக்குதல்களை மேற்கொண்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications