ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.25 லட்சம் நிதி:ஓய்வுபெற்ற ஐஏஎஸ் பாலச்சந்திரனுக்கு ஒரு விசில் போடுங்க
ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
பெங்களூரு : ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தமிழ் இருக்கைக்காகத் தனி ஒரு நபர் அளித்த நிதியுதவில், இந்தியாவிலேயே இது தான் மிக அதிகத் தொகை.
அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில், உலகத் தமிழர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்கா வாழ் தமிழர்களான திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ. 45 கோடி நிதி தேவைப்படுகிறது. இதற்காக பலரும் நிதி கொடுத்து வந்த போதும், நிதிப்பற்றாக்குறை நிலவி வருகிறது.

கமல் ரூ. 20 லட்சம்
தமிழக அரசு தன்னுடைய பங்காக தமிழ் இருக்கை அமைக்க ரூ. 10 கோடி நிதி உதவி தருவதாக கூறியுள்ளது. நடிகர் கமல்ஹாசனும் தமிழ் இருக்கைக்காக ரூ. 20 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
ரூ. 25 லட்சம் நிதி
இதே போன்று நடிகர் விஷாலும் தமிழ் இருக்கை அமைப்பதற்காக ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நிதியுதவி அளித்து வருகின்றனர். இதே போன்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரனும் ஹார்வேர்டு தமிழ் இருக்கைக்காக ரூ. 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

பாலச்சந்திரன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ்
சிவகங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பாலச்சந்திரன் மேற்குவங்க மாநில கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். இஸ்ரோ ஆன்ட்ரிக்ஸ் ஊழல் விவகாரத்தில் தைரியமாக தன்னுடைய பணிக்காலத்திலேயே முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர் பாலச்சந்திரன். இந்தியாவைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் ரூ. 25 லட்சம் நிதியுதவி கொடுத்துள்ளார், இதுவரை பெறப்பட்ட நிதிகளிலேயே இது தான் அதிக நிதியுதவி.

தமிழ் ஆசிரியர் தந்தது தான்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் நிதியுதவி அளித்ததை விட 82 வயது ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியர் ரூ. 8 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது தான் பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளார். தமிழ் இருக்கை அமைக்க முடிந்தவர்கள் தங்களால் இயன்ற உதவியை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications