ராஜஸ்தானில் ஷாக்.. ராஜ்புத் கர்னி சேனா தலைவர் வீடு புகுந்து சுட்டுக்கொலை.. பரபர சிசிடிவி காட்சி
ஜெய்பூர்: ரராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவராக சுக்தேவ் சிங் சோகமெடி இருந்தார். தீவிர வலது சாரி அமைப்பாக ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு பார்க்கப்பட்டது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் உள்ள ஷியாம் நகரில் சுக்தேவ் சிங்கின் வீடு உள்ளது. இவருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

சுக்தேவ் சிங் சோகமெடி வழக்கம் போல தனது வீட்டில் இருந்த போது திடீரென அவரது வீட்டை நோக்கி பைக்கில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. வீட்டிற்குள் திடீரென நான்கு பேரும் புகுந்து சுக்தேவ் சிங் சோகமெடி மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், சுக்தேவ் சிங் சோகமெடி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இந்த துப்பாக்கிச்சூட்டை தடுக்க முயன்ற அவரது பாதுகாப்புக்காக சென்ற போலீசார் இருவரும் காயம் அடைந்தனர்.
சுட்டுக்கொலை: படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சுக்தேவ் சிங் சோகமெடியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. வலது சாரி அமைப்பை சேர்ந்த சுக்தேவ் சிங் பட்ட பகலில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில், வலது சாரி அமைப்பை சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கேங்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னோய் இந்த கொலைக்கு பொறுப்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சி: இந்த நிலையில் சுக்தேவ் சிங் 4 நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஷோபோவில் சுக்தேவ் சிங் அமர்ந்திருக்கிறார். அப்போது அவருடன் மற்றொரு ஷோபோவில் அமர்ந்திருந்து அவருடன் பேசிக்கொண்டு இருந்த இரண்டு இளைஞர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்து இருவரும் சுக்தேவ் சிங்கை நோக்கி சுட தொடங்கினர்.
இளைஞர்கள் இரண்டு பேரும் சுக்தேவ் சிங்கை மாறி மாறி துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி செல்வது போன்ற வீடியோ அதில் பதிவாகியிருந்தது. பட்ட பகலில் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications