சோனியா மருமகன் வதேராவின் நிலக் கொள்ளை: விசாரிக்க கமிஷன் அமைத்த ஹரியானா அரசு!!
சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நிலக்கொள்ளை குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ஹரியானா அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது விவசாயிகளிடம் இருந்து மிகவும் சொற்பமான விலைக்கு நிலத்தை அரசு அதிகாரிகள் உதவியுடன் பறித்து சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேராவின் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டது.

ராபர்ட் வதேராவோ மிக சொற்பமான விலைக்கு வாங்கிய நிலத்தை டி.எல்.எப். போன்ற தனியார் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்று லாபமடைந்தார். இதனை ஹரியானா அரசு அதிகாரி அசோக் கெம்கா முதன் முதலில் அம்பலப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அப்போதைய ஹரியானா அரசு கெம்காவுக்கு இடமாற்றம் உள்ளிட்ட குடைச்சலைக் கொடுத்தது.
ஹரியானாவில் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த மாநிலங்களிலும் அரசு அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ராபர்ட் வதேராவின் நிலக்கொள்ளை தொடர்ந்தது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்தவுடன் ராபர்ட் வதேரா தமது பெயரிலான நிறுவனங்களை கலைத்துவிட்டார். இந்த நிலையில் ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலின் போது வதேராவின் நிலக்கொள்ளை விவகாரத்தை கையிலெடுத்த பாரதிய ஜனதா தாங்கள் ஆட்சியில் அமர்ந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம் என வாக்குறுதி அளித்தது.
அதன்படி ஹரியானாவில் பாரதிய ஜனதா அரசு ஆட்சியைக் கைப்பற்றிய உடனேயே ராபர்ட் வதேராவின் நிலக்கொள்ளை குறித்து விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில்தான் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ராபர்ட் வதேராவின் நிலக்கொள்ளை குறித்து முழுமையாக விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்படும் என்று ஹரியானாவின் மூத்த அமைச்சர் ராம்பிலாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
ஹரியானா அரசின் இந்த அதிரடி காங்கிரஸ் மேலிடத்தை கதிகலங்க வைத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications