ரூபா அறிக்கையிலுள்ள ஒவ்வொரு வரியும் உண்மை.. உணர்த்திவிட்ட சசிகலா வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அங்கிருந்து சுமார் முக்கால் கி.மீ தூரத்திலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று வந்ததாக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அந்த அறிக்கை மீடியாவில் வெளியாகியிருந்தது. சிலர் அது பொய்யானது என வாதிட்டனர். இந்த நிலையில் தற்போது கன்னட மீடியாவில் வெளியாகியுள்ள வீடியோவில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறைலிருந்து வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளது.

Roopa's report proven by latest video

இதை பார்த்தபிறகு, ரூபா அறிக்கையிலுள்ள ஒவ்வொரு வரியிலும் உண்மையுள்ளது என்பது அம்பலமாகிவிட்டது.

[Read This: சிறையிலிருந்து அவ்வப்போது வெளியே வந்த சசிகலா.. சிறை அதிகாரி காரில் ஜாலி ரவுண்ட்! அதிர்ச்சி தகவல்]

மேலும் ரூ.2 கோடி வழங்கி சிறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு சசிகலா சிறையையே கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்று ரூபா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Sasikala’s VIP Treatment, DIG Roopa Transferred-Oneindia Tamil

சசிகலா ஹாயாக ரவுண்டு சென்றுவருவதை பார்க்கும்போது பணம் பரப்பன அக்ரஹாரா வரை பாய்ந்துள்ளது என்று பாஜகவின் எச்.ராஜா சொன்னது உண்மைதானோ என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Roopa's report proven by latest video in which Sasikala going round in Bengaluru jail.
Please Wait while comments are loading...