தமிழக ஆளுநர் கே.ரோசைய்யா பிரணாப் முகர்ஜியுடன் சந்திப்பு
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வீட்டில் நடைபெறும் மகாசண்டியாகத்தில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று தமிழக ஆளுநர் கே.ரோசைய்யா இன்று சந்தித்துப் பேசினார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மெடக் மாவட்டம் எர்ரவள்ளி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது சொந்தப் பணம் ரூ.20 கோடி செலவில், உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் மகாசண்டியாகம் நடத்தி வருகிறார். கடந்த 23-ந்தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த யாகம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த பூஜையில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆந்திரா,கர்நாடகா,தமிழகம், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் இந்த யாகத்தை நடத்தி வருகின்றனர்.
இதற்காக, தெலுங்கானாவுக்கு வந்துள்ள குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை தமிழ்நாடு ஆளுநர் கே.ரோசைய்யா இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications