For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூர் சிறைக்கு வெளியே கலாட்டா செய்ய "அத்திபலே ரவுடி"யை செட்டப் செய்த சசிகலா குரூப்!

சசிகலா சிறைக்கு வந்தபோது வேண்டும் என்றே கலாட்டா செய்து வன்முறையைத் தூண்டுவதற்காக ரவுடியை செட்டப் செய்தது அம்பலமாகியுள்ளது.

Google Oneindia Tamil News

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளான சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சரணடைய வந்தபோது சிறைக்கு வெளியே திடீரென நடந்த கலவரம் திட்டமிட்ட நாடகம் என்று தெரிய வந்துள்ளது. அத்திபலேவைச் சேர்ந்த ஒரு ரவுடிக்குப் பணம் கொடுத்து கூட்டி வந்து கலாட்டா செய்து வைத்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த அத்திபலே ரவுடி தற்போது தலைமறைவாகி விட்டான். அவனை பெங்களூரு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். வன்முறையை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த ரவுடிக்கு அறிவுறுத்தி கூட்டி வந்துள்ளனராம்.

இதனால்தான் அமைதியாக இருந்த அந்த இடத்தில் திடீரென வன்முறை வெடித்தது. சசிகலாவுடன் வந்தவர்களின் வாகனங்கள் தாக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் காரணம் பணம் கொடுத்துக் கூட்டி வரப்பட்ட அந்த ரவுடிதான்.

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இல்லை

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இல்லை

முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்தான் இந்த கலவரத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டது. இருப்பினும் போலீஸார் நடத்திய விசாரணையில் இது பொய் எனத் தெரிய வந்தது. இது சசிகலா தரப்பே திட்டமிட்டு நடத்திய நாடகம் என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஜெயிலுக்குள் ஆபத்து என்ற நாடகமாட

ஜெயிலுக்குள் ஆபத்து என்ற நாடகமாட

பெங்களூரு சிறைக்குள் சசிகலாவுக்கு ஆபத்து உள்ளது. எனவே அவரை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த நாடகம் நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்திபலே ரவுடி

அத்திபலே ரவுடி

தற்போது அந்த அத்திபலே ரவுடி தலைமறைவாகி விட்டான். அவனைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவத்தின்போது நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான் அந்த ரவுடி குறித்த தகவல் கிடைத்தது. அந்த ரவுடிதான் இந்த நால்வரையும் ஏற்பாடு செய்து கூட்டி வந்துள்ளான்.

காசு கொடுத்து கூப்பிட்டாங்க

காசு கொடுத்து கூப்பிட்டாங்க

நான்கு பேரும் போலீஸ் விசாரணையின்போது, நாங்கள் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர்கள் இல்லை. எங்களிடம் பணம் கொடுத்து வாகனங்களைத் தாக்கச் சொன்னார்கள். செய்தோம் என்று கூறியுள்ளனர்.

எதுக்கு இந்தப் பொழப்பு!

English summary
Investigations being conducted into the violence that erupted outside the Bengaluru central jail the day Sasikala Natarajan surrendered has revealed that the incident was a stage managed one. Police officials are on the lookout for a rowdy sheeter from Attibele in Bengaluru who was hired to stage the violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X