For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செம.. சூப்பர்.. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5,000.. அசத்தும் மத்திய பிரதேச அரசு!

Google Oneindia Tamil News

போபால்: கொரோனா தொற்றால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளுக்கு ரூ.5,000 மாத உதவித்தொகையும், இலவச கல்வியும் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அசத்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 1 கோடி நிதி - வெங்டேசன் எம்.பி கடிதம் மதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 1 கோடி நிதி - வெங்டேசன் எம்.பி கடிதம்

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,000-க்கு மேற்பட்ட பாதிப்புகளும், 80-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் எற்பட்டு இருகின்றன.

நிர்கதியான குழந்தைகள்

நிர்கதியான குழந்தைகள்

இந்தூரில் மட்டும் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. மாநிலத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பல குடும்பங்களில் பெற்றோர்கள் உயிரிழந்து விடுவதால் அவர்களின் குழந்தைகள் ஆதரவுக்கு யாரும் இல்லாமல் நிர்கதியாய் இருப்பதாக மாநில அரசுக்கு தொடர்ந்து தகவல்கள் வந்தன.இந்த குறைகளை களைய அருமையான திட்டத்தை கையில் எடுத்துள்ளது சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு.

மாதம் ரூ.5,000

மாதம் ரூ.5,000

அதாவது பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைக்ளுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். அவர்களுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்படும். அந்த குழந்தைகளுக்கு ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். அவர்கள் சுயமாகத் தொழில் தொடங்க வட்டியில்லா கடனுதவி வழங்கப்படும் என்று சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.

அரசு கவனித்து கொள்ளும்

அரசு கவனித்து கொள்ளும்

இது தொடர்பாக சிவராஜ் சிங் சவுகான் நெகிழ்ச்சியுடன் கூறுகையில், ' கொரோனா தொற்றால் பல குடும்பங்கள் ஆதரவு இல்லாத நிலைக்கு சென்றுள்ளன. பல குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். அவர்களை அப்படியே விட்டு விட முடியாது. பெற்றோரை இழந்த பிள்ளைகள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களை அரசு கவனித்துக் கொள்ளும்.

பலரும் பாராட்டு

பலரும் பாராட்டு

பல வயதானவர்கள் தங்கள் குழந்தைகளை இழந்துவிட்டனர். அவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை. அவர்கள் உயிர்வாழும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இத்தகைய மனிதர்களையும் தனியாக விட்டுவிட முடியாது. அவர்களை காப்பதும் எங்களின் பொறுப்பாகும் என்று சிவராஜ் சிங் சவுகான் கூறினார். மத்திய பிரதேச அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் இதுபோல் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
The Madhya Pradesh government has announced a monthly stipend of Rs 5,000 and free education for children who have lost their parents due to corona infection
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X