ஜாதி பாகுபாட்டை ஒழிச்சு கட்டுங்க.. உதயநிதி பாணியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு திடீர் கட்டளை!
வதோதரா: ஜாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவதை விட ஜாதிய பாகுபாட்டை ஒழித்து கட்ட வேண்டும் என்று அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே வலியுறுத்தி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் இந்துத்துவ கோட்பாடுகளின் படி ஜாதிய கட்டமைப்பு நியாயப்படுத்தப்படுகிறது. ஜாதிய அடுக்குமுறையும் சரி என வாதிடப்படுகிறது. இந்துத்துவ சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. அதன் அரசியல் பிரிவுதான் மத்தியில் ஆளும் பாஜக.

இடஒதுக்கீடு கோட்பாடு: ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வருகிற போதெல்லாம் எதிர்த்து குரல் கொடுப்பது பாஜகதான். ஆனாம் உயர் ஜாதி ஏழைகளுக்கு வருமான வரம்பு விதித்து 10% இடஒதுக்கீடு கொடுத்ததும் மத்தியில் ஆளும் பாஜக அரசுதான். அதேபோல சமூக ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு தேவை என நியாயப்படுத்தி பேசி வருவதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான்.
ஜாதிய ஒடுக்குமுறைகள்: இந்த வரிசையில் ஜாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் அதன் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே. குஜராத் மநிலம் வதோதராவில் நிகழ்ச்சி ஒன்றில் தத்தாத்ரேயா ஹொசபலே பேசியதாவது: ஒவ்வொருவருக்கும் கோவிலுக்குள் நுழைய உரிமை உண்டு. எந்த இடத்திலும் யார் வேண்டுமானாலும் குடிநீரை எடுக்கலாம். ஜாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை, தீண்டாமைகளை நாம் சகித்துக் கொண்டிருக்க கூடாது.
ஜாதிய ஒடுக்குமுறை ஒழிப்பு: ஜாதிய ஒடுக்குமுறை ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கிறது. இத்தகைய ஜாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடக் கூடாது; ஜாதிய ஒடுக்குமுறைகளை அழித்தொழிக்க வேண்டும்.
எங்கய்யா ஜாதி பார்க்கிறாங்க?: விளையாட்டுப் போட்டிகளில் இந்தியர்கள் சாதிக்கிறார்கள். அவர்களிடம் என்ன ஜாதி என்றா கேட்கிறோம். என்ன மதம் என்றா கேட்கிறோம். கொரோனா காலத்தில் ஜாதிகளைக் கடந்துதானே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவி செய்தோம். சந்திரயான் -3 விண்வெளியில் வெற்றிகரமாக பாய்ந்தது.. அப்போது அந்த விஞ்ஞானிகளின் ஜாதிகளையா நாம் பார்த்து கொண்டிருந்தோம்? ஒரு பிரச்சனை, ஒரு வெற்றியின் போது ஒட்டுமொத்த தேசமும் ஒற்றுமையாக நிற்கிறது என்பதுதான் தேவையானதும் முதன்மையானதும்.
சனாதனம் என்பது என்ன?: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என சிலர் மிரட்டல் விடுக்கின்றனர். இந்துக்களைப் பற்றி பேசுவதாலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மதவாதம் என்கிறார்கள். சனாதன தர்மம் என்பது சடங்குகளைப் பற்றியது அல்ல. வழிபாட்டு முறைகளைப் பற்றியது. கடவுள்களை மனித உருவில் பார்ப்பது பற்றி பேசுவது சனாதனம்.
உலகம் ஒரு குடும்பம்: இந்தியா யூதர்கள், பார்சிகள், தலாய் லாமாவின் ஆதரவாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. ஏனெனில் உலகம் ஒரு குடும்பம் என்ற கோட்பாட்டை பின்பற்றுவதால்தான். கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி கொடுத்ததும் இந்த உலகம் ஒரு குடும்பம் என்ற கோட்பாட்டின் கீழ்தான். இலங்கைக்கு பொருளாதார நெருக்கடியின் போது நிதி உதவி செய்ததும் உலகம் ஒரு குடும்பம் என்பதால்தான். ஒருநாள் இந்தியா உலகத்துக்கே வழிகாட்டியாக உருவெடுக்கும். இதற்கான வலிமை இந்துக்களிடம் உண்டு. இவ்வாறு தத்தாத்ரேயா ஹொசபலே உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் சனாதன தர்மம் எதிர்க்கப்பட வேண்டியது இல்லை; ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என பேசியிருந்தார் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவரது பெயரை தத்தாத்ரேயா ஹொசபலே தமது பேச்சில் குறிப்பிடால மறைமுகமாக விமர்சித்திருந்தார். ஆனால் அவரைப் போல ஜாதிய ஒடுக்குமுறைகளை எதிர்க்கக் கூடாது; ஜாதிய ஒடுக்குமுறைகளை ஒழிக்கத்தான் வேண்டும் என பேசியிருக்கிறார் தத்தாத்ரேயா ஹொசபலே என்பது குறிப்பிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications