மணிப்பூரில் திடீரென எப்படி கலவரம் வந்தது? “வெளிப்புற” சக்திகளின் சதி.. RSS தலைவர் மோகன் பகவத் பேச்சு
நாக்பூர்: மணிப்பூர் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும், வடகிழக்கு மாநிலத்தின் அசாதாரண நிலைமைக்கு வெளிப்புற சக்திகள் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.
ஒவ்வொரு ஆண்டும் விஜய தசமி அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டதன் 98வது ஆண்டு விழா மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றுப் பேசினார்.

மோகன் பகவத் பேசுகையில், "மணிப்பூர் ஒரு எல்லைப்புற மாநிலம். மணிப்பூர் வன்முறையில் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கின்றனர். மைத்தேயி - குக்கி சமூக மக்கள் அங்கு நீண்டகாலம் ஒன்றாகத்தான் வாழ்ந்து வந்தனர். திடீரென அங்கு எப்படி கலவரம் மூண்டது? இதை திட்டமிட்ட சதியாகவே எண்ண முடியும். இந்த மோதல்களால் வெளிநாட்டு சக்திகளுக்கு நன்மை உண்டாகும். இதில் ஏதாவது வெளிநாட்டு சதிகள் இருக்கின்றனவா? தற்போது ஏற்பட்டிருக்கும் பிரிவினைவாதத்தினாலும் உள் முரண்பாடுகளினாலும் யாருக்கு நன்மை?
இந்த முரண்பாடுகள் அனைத்தும் வெளி சக்திகளுக்குத்தான் பலன் தரும். அங்கு நடந்த சம்பவத்தில் வெளியிலிருந்து வந்தவர்கள் ஈடுபட்டார்களா... மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூரில் மூன்று நாள்கள் இருந்தார். உண்மையில் மோதலை தூண்டியது யார்... வன்முறை அங்கு நடக்கவில்லை, நடத்தி வைக்கப்படுகிறது.
மணிப்பூரில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மையைப் பயன்படுத்திக்கொள்ள வெளிநாட்டுச் சக்திகள் ஆர்வமாக இருக்கலாம். தென்கிழக்கு ஆசியாவின் புவிசார் அரசியலுக்கும் இந்த நிகழ்வுகளில் பங்கு இருக்கிறதா எனப் பல கேள்விகள் எழுகின்றன. அமைதியை மீட்டெடுக்கும்போது ஏற்படும் பல சம்பவங்கள் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்துகின்றன.
இது போன்ற செயல்களைச் செய்தவர்களின் பின்னணியில் இருப்பது யார்? வன்முறையைத் தூண்டுவது யார்? ஒற்றுமையை விரும்புபவர்கள் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளால் மனம் தளராமல் அமைதியாகவும், நிதானத்துடனும் பணியாற்ற வேண்டும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பாடுபட்ட சங் பரிவார்களை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்றார்.
மேலும் பேசிய மோகன் பகவத், "வாக்குகளைப் பெறுவதற்காக நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடக்கும். இதுபோன்ற முயற்சிகள் நடந்தாலும், வாக்காளர்கள் தங்களுக்கு முன் இருக்கும் சிறந்த விருப்பத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டின் மக்கள் அனைவரையும் பார்த்திருக்கிறார்கள். இப்போது அதிலிருந்து சிறந்த தேர்வை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்." என மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.
வாக்குகளைப் பெறுவதற்காக நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சிகள் நடக்கும். இதுபோன்ற முயற்சிகள் நடந்தாலும், வாக்காளர்கள் தங்களுக்கு முன் இருக்கும் சிறந்த விருப்பத்தை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டின் மக்கள் அனைவரையும் பார்த்திருக்கிறார்கள். இப்போது அதிலிருந்து சிறந்த தேர்வை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தாய்நாட்டின் மீதான பக்தி, முன்னோர்கள் மீதான பெருமை, பொது கலாச்சாரம் ஆகிய மூன்று கூறுகள், மொழி, பகுதி, மதம், பிரிவு, ஜாதி மற்றும் உட்பிரிவுகள் ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் ஒன்றிணைத்து நம்மை ஒரே தேசமாக்குகின்றன. இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்த நம்பிக்கைகள் இந்த கூறுகளை நிலைநிறுத்த வேண்டும்.
கலாசார மார்க்சிஸ்டுகள் அராஜகம், குழப்பம் மற்றும் ஊழலை ஊக்குவித்து அதிகப்படுத்துகின்றன. ஊடகங்கள், கல்வித்துறை மற்றும் பிற துறைகளில் அவர்களின் செல்வாக்கு மூலம், அவர்கள் சமூக ஒழுங்கு, ஒழுக்கம், கலாசாரம், கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றைச் சீர்குலைக்க முற்படுகின்றனர்." எனப் பேசியுள்ளார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications