இந்திய கல்வி முறையை அழிக்கும் ஆர்.எஸ்.எஸ்.- கவலைப்படாத மோடி: ராகுல் காந்தி சரமாரி தாக்கு!
டெல்லி: "இந்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து துணைவேந்தர்களும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வரும் காலங்களில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தேர்வுசெய்யப்பட்டவர்கள்தான் நியமிக்கப்படுவார்கள்; இது நாட்டுக்கு பேராபத்து" என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசியதாவது: இன்று, இந்தியாவின் எதிர்காலத்தையும் அதன் கல்வி முறையையும் அழிப்பதில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது. நமது கல்வி முறை ஆர்.எஸ்.எஸ்ஸின் கைகளுக்குச் சென்றால், நாட்டில் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காது, நாடு நாசமாகிவிடும்.

இன்று, இந்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து துணைவேந்தர்களும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வரும் காலங்களில், மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் ஆர்.எஸ்.எஸ்ஸால் தேர்வுசெய்யப்பட்டவர்கள்தான் நியமிக்கப்படுவார்கள்.இது நாட்டிற்கு ஆபத்தானது, இதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.
இன்று, இந்தியாவின் எதிர்காலத்தையும் அதன் கல்வி முறையையும் அழிப்பதில் RSS ஈடுபட்டுள்ளது.
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) March 24, 2025
நமது கல்வி முறை ஆர்.எஸ்.எஸ்ஸின் கைகளுக்குச் சென்றால், நாட்டில் யாருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காது, நாடு நாசமாகிவிடும்.
இன்று, இந்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து துணைவேந்தர்களும்… pic.twitter.com/MlOE0hiLKm
நாட்டின் கல்வி துறையை ஆர்.எஸ்.எஸ். அழித்து வருவது பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு எந்த கவலையும் இல்லை. அவரது கவலை எல்லாம் அதானி, அம்பானியின் செல்வங்களை பாதுகாப்பதில் மட்டுமே உள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக போராடி ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவை தோற்கடிப்போம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications