மேக் இன் இந்தியா: இந்தியாவில் ஆண்டுக்கு 400 ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கப் போகும் ரஷ்யா!
டெல்லி: மேக் இன் இந்தியா கோஷத்துக்கு இணங்க, இந்தியாவிற்குள்ளேயே ஆண்டுக்கு நானூறு ஹெலிகாப்டர்களை தயாரிக்க ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே நேற்று டெல்லியில் கையெழுத்தான பல ஒப்பந்தங்களில் முக்கியமானது ஹெலிகாப்டர் தயாரிப்பு குறித்த ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தப்படி ரஷ்யாவின் தொழில்நுட்பத்துடன் கூடிய கேஏ-226டி என்ற இரட்டை இன்ஜின் வகை ஹெலிகாப்டர்கள் இனிமேல் இந்தியாவிற்குள்ளேயே தயாரிக்கப்படும். ஆண்டுக்கு 400 ஹெலிகாப்டர்கள் இதுபோல தயாரிக்கப்படும்.
இந்த வகை ஹெலிகாப்டர்கள், மலைப்பாங்கான பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு அதிகம் உதவிகரமாக இருக்கும். ரஷ்யாவுடனான ஒபந்தம் போடப்படும்போது பேசிய, மோடி, இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகரித்துவிட்ட போதிலும், ரஷ்யாதான் முக்கியமான பாதுகாப்பு துறை கூட்டாளியாக இருக்கும் என்று உறுதிபட தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகள் கண்டிப்பாக அமெரிக்கா வயிற்றில் புளி கரைத்திருக்கும் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications