For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பம்பை ஆற்றில் வடியாத வெள்ளப்பெருக்கு.. மூடப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோயில்!

சபரிமலை கோயில் இழுத்து மூடப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வடியாத வெள்ளப்பெருக்கு...மூடப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோயில்!- வீடியோ

    சபரிமலை: வரலாறு காணாத வெள்ளம் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    கேரள மாநிலத்திற்கு தனி பெருமையையும், அந்தஸ்தையும், சிறப்பையும், அடையாளத்தையும், மகிமையையும் அள்ள அள்ள குறையாமல் கொடுத்து கொண்டிருப்பது சபரிமலை ஐயப்பன் கோயில்.

    உலக புகழ்பெற்ற இந்த கோயில் பம்பை ஆற்று பகுதியில் உள்ளது. இயற்கை அன்னை தற்போது கேரளா மீது கடுமையான சீற்றம் கொண்ட காரணமாக அந்த மாநிலமே தற்போது தண்ணீரில் தத்தளிக்கிறது. வீடு, வாசல், துணிமணிகள், பாத்திர, பண்டங்கள் ஏதுமின்றி மக்கள் திணறி வருகிறார்கள். உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள நல்லுள்ளம் படைத்தவர்கள் முடிந்த அளவு உதவி வருகிறார்கள். அதனால் ஓரளவு அம்மாநில மக்கள் மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

    மீண்டு வரும் மக்கள்

    மீண்டு வரும் மக்கள்

    உலக புகழ்பெற்ற இந்த கோயில் பம்பை ஆற்று பகுதியில் உள்ளது. இயற்கை அன்னை தற்போது கேரளா மீது கடுமையான சீற்றம் கொண்ட காரணமாக அந்த மாநிலமே தற்போது தண்ணீரில் தத்தளிக்கிறது. வீடு, வாசல், துணிமணிகள், பாத்திர, பண்டங்கள் ஏதுமின்றி மக்கள் திணறி வருகிறார்கள். உலகின் மூலை முடுக்கெல்லாம் உள்ள நல்லுள்ளம் படைத்தவர்கள் முடிந்த அளவு உதவி வருகிறார்கள். அதனால் ஓரளவு அம்மாநில மக்கள் மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

     களிமண்-சேறு

    களிமண்-சேறு

    இந்நிலையில் இன்னும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டே இருக்கிறது. பத்தினம்திட்டா மாவட்டம் மழையாலும், வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு வடியவே இல்லை. அத்துடன் ஐயப்பன் கோயிலுக்குள்ளும் இந்த வெள்ள நீர் சென்றுவிட்டது. இதனால் கோயில் வளாகம் முழுவதும் களிமண்ணும், சேறுமாக கிடக்கிறது. அந்த பகுதியில் உள்ள மரங்களும் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன.

     கோயில் மூடப்பட்டது

    கோயில் மூடப்பட்டது

    இதனால் வரும் 23-ம் தேதி முதல் ஓணம் பண்டிகைக்கான பூஜை சபரிமலை ஐயப்பன் கோயிலில் தொடங்க உள்ளதைகூட, கேரள அரசு ரத்து செய்துவிட்டது. இது இல்லாமல், ஐயப்பன் கோயிலுக்கு ஓணம் பண்டிகைக்காக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானமும் கேட்டுக் கொண்டதுடன், கடந்த 13-ம் தேதியன்று கோயிலையும் மூடியது.

     பூஜைகள் தொடர்ந்து நடக்கும்

    பூஜைகள் தொடர்ந்து நடக்கும்

    தற்போது பம்பையில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் ஐயப்ப போயிலின் அடுத்த அறிவிப்பு வரும்பரை கோயில் மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் இன்றும் தெரிவித்துள்ளது. கோயிலை மூடினாலும் அனைத்து பூஜைகளும் தொடர்ந்து நடக்கும் என கூறப்படுகிறது.

    English summary
    Sabarimala Ayyapan Temple closes till further notice
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X