சச்சின் பைலட் vs அசோக் கெலாட்.. காங். மீட்டிங்கிற்கு வராத 18 எம்எல்ஏக்கள்.. ராஜஸ்தானில் திருப்பம்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்து வருகிறது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ராஜஸ்தான் டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் மீட்டிங் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 18 எம்எல்ஏக்கள் வரை இன்று கலந்து கொள்ளவில்லை.
ராஜஸ்தான் அரசியல் குழப்பத்தின் கிளைமேக்ஸ் நெருங்கி வருகிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் கொதித்து எழுந்து உள்ளார். முதல்வர் அசோக் கெலாட் ஆட்சி இதனால் அங்கு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இரண்டு தரப்பின் ஆதரவு எம்எல்ஏக்களும் தனி தனியாக ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் இருக்கிறார். டெல்லியில் தன்னுடன் 30 எம்எல்ஏக்கள் இருப்பதாக சச்சின் பைலட் கூறியுள்ளார்.
ஆனால் அவரிடம் 12-16 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இன்னொரு பக்கம் அசோக் கெலாட் தனது எம்ஏக்களை ஜெய்ப்பூர் அருகே டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்க வைத்து உள்ளார். அசோக் கெலாட் ஆட்சிக்கு 102-107 எம்எல்ஏக்கள் ஆதரவு தர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
அங்கு அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் நேற்றுதான் அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அங்கு நிலவும் அரசியல் குழப்பம் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. முதல்வர் அசோக் கெலாட் மூலம் கூட்டப்பட்ட இந்த ஆலோசனையில் 107 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு அசோக் கெலாட்டிற்கு ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையில் சச்சின் பைலட் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ராஜஸ்தானில் இன்று மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ராஜஸ்தான் டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் மீட்டிங் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சச்சின் பைலட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இன்று நடக்கும் மீட்டிங்கிலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ள வில்லை.
அதேபோல் இந்த கூட்டத்தில் 18 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வரை இன்று கலந்து கொள்ளவில்லை. நேற்று 107 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று 101 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதிலும் விஷவேந்திரா, ரமேஷ் சந்த் மீனா, பன்வர்லால் மெஹவால் ஆகிய அமைச்சர்களும் கூட மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் உண்மையில் கெலட் தரப்பிற்கு எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications