நடிகையாகிறாரா சச்சின் மகள் சாரா...?
மும்பை: சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியின் மகள் சாரா டெண்டுல்கர் நடிகையாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திப் படம் ஒன்றில் நடிக்க அவரை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
சச்சின் - அஞ்சலி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவர் சாரா (18). அடுத்து மகன் அர்ஜூன். இவர்களில் அர்ஜூன் தனது தந்தை வழியில் கிரிக்கெட் வீரராக வளர்ந்து வருகிறார். இன்னும் அவர் லைம்லைட்டுக்கு வரவில்லை.

மூத்த குழந்தையான சாரா குறித்துத்தான் இப்போது செய்திகள் வேகம் பிடித்துள்ளன. ஏற்கனவே சாரா மீது பாலிவுட் கண்கள் பாய்ந்தபடியே இருந்தன. மிகவும் அழகாக மட்டுமல்ல, புத்திசாலியாகவும் இருப்பவர் சாரா என்று புகழ் வட்டத்தில் இருந்து வந்தார். தற்போது அவரை நடிகையாக்க முயற்சிகள் நடந்து வருகின்றனவாம்.
இதுகுறித்து மனோரமா ஆன்லைன் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
ஷாஹித் கபூருடன் இணைந்து சாரா நடிக்கப் போவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
தற்போது சாரா, திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிகையாகப் போவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அதேபோல ஷாருக் கானின் ஆர்யனும் நடிக்கப் போவதாக தகவல்கள் உள்ளன. இப்போது இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக புதுத் தகவல் வெளியாகி வருகிறது.

இப்போது சச்சின் மகள் பெயரை இழுத்து விட்டுள்ளனர்.
விளையாட்டு உலகிலிருந்து திரையுலகுக்கு வாரிசுகள் வருவது புதிதல்ல. ஏற்கனவே பேட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனேவின் மகள் தீபிகா படுகோனே இந்தித் திரையுலகில் ராணியாக திகழ்ந்து வருவது நினைவிருக்கலாம்.
-
திறமை இருக்கு சரி.. அந்த பண்பை பாருங்க! சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications