For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவசரப்பட்டு மோடி பற்றி ட்வீட் போட்டு அசிங்கப்பட்ட பத்திரிக்கையாளர் சகாரிகா கோஸ்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி பாரீஸில் பிரபல லூயி வூய்ட்டன் பிராண்ட் சால்வை அணிந்ததாக தவறாக ட்வீட் போட்டதற்காக பத்திரிக்கையாளர் சகாரிகா கோஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல்கட்டமாக பிரான்ஸ் சென்றார். பாரீஸில் அவர் அணிந்திருந்த சால்வை பற்றி பிரபல பத்திரிக்கையாளரான சகாரிகா கோஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

Sagarika Ghose apologises after Louis Vuitton says it did not make Modi's Paris shawl

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பாரீஸில் இந்திய பிரதமர் லூயி வூய்ட்டன் சால்வை அணிந்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைத்தறி சால்வையை அணிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார்.

இந்த ட்வீட்டை பார்த்த ஒருவர் லூயி வூய்ட்டனிடம் இது குறித்து ட்விட்டரில் கேட்க அந்த நிறுவனமோ மோடி அணிந்திருந்தது எங்கள் பிராண்ட் சால்வை அல்ல என்று தெரிவித்தது. இதையடுத்து சகாரிகா ட்விட்டர் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவரது ட்வீட்,

ஓகே மக்களே, எல்.வி. ட்வீட்டுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் அணிந்திருந்தது எல்.வி. சால்வை அல்ல. அது எல்.வி. சால்வையாக இருந்திருந்தாலும் தவறு இல்லை என்று தெரிவி்த்துள்ளார்.

English summary
Senior journalist Sagarika Ghose appologised for tweeting about PM Modi wearing Louis Vuitton shawl in Paris.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X