மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்..காங். வேட்பாளர் திகில் பேச்சு - வழக்குப் பதிவு
டெல்லி: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிக்க வேண்டும் என்று தமிழகத்தில் அதிமுக வேட்பாளர் ஒருவர் திமிர்த்தனமாக பேசிய நிலையில் தற்போது உ.பி.யைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உ.பி. மாநிலம் சஹாரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் இம்ரான் மசூத். இவர் பேசியதாக ஒரு வீடியோ தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஒரு கூட்டத்தில் மசூத் பேசுகையில், உ.பி. குஜராத் அல்ல. குஜராத்தில் வெறும் 4 சதவீத முஸ்லீம்கள்தான் வசிக்கின்றனர். ஆனால் உ.பியில் 22 சதவீதம் முஸ்லீம்கள் உள்ளனர்.
எனவே நான் மோடியை எதிர்த்து தீவிரமாக மோதுவேன். அவருக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அவரை துண்டு துண்டாக வெட்டி எறிந்து விடுவேன் என்று அவர் பேசியதாக அந்த வீடியோ காட்சி கூறுகிறது.
மசூத்தின் இந்தப் பேச்சு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து தற்போது தேர்தல் ஆணையம் இதுகுறித்த விவரத்தை மாநில தேர்தல் அதிகாரியிடம் கோரியது. தற்போது அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே மசூத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து மசூத் தான் பேசியது தவறு என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications