ப. சிதம்பரத்தை செருப்பு- விளக்குமாறால் அடியுங்கள்: அதிமுக வேட்பாளரின் திமிர் பேச்சு
மானாமதுரை: வாக்கு கேட்டு உங்கள் தொகுதிக்கு ப. சிதம்பரம் வந்தால் அவரை செருப்பால் அடியுங்கள் என்று மக்களிடம் தெரிவித்த அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் பி.ஆர்.செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவர் மானாமதுரை அருகே உள்ள ஆனந்தச்சேரி என்ற இடத்தில் நேற்று மாலை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வாக்கு கேட்டு உங்கள் பகுதிக்கு வந்தால் அவரை விளக்குமாற்றாலும், செருப்பாலும் அடியுங்கள் என்று மக்களை பார்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சிலர் அங்கு வந்துள்ளனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் இன்று கூட்டமாக வந்து போலீசில் செந்தில்நாதன் மீது புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து தேர்தல் அலுவலரிடம் தெரிவித்து வழக்குப் பதிவு செய்யப்படும் என்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications