மவுனம் கலைத்த சாகித்ய அகாடமி... கல்பர்கி படுகொலைக்கு கண்டனம் - எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்!
டெல்லி: நீண்ட மவுனத்துக்குப் பின்னர் எழுத்தாளர் கல்பர்கி படுகொலைக்கு சாகித்ய அகாடமி கண்டனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அகாடமி விருதை திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்கள் அதனை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்பர்கி உள்ளிட்டோர் மதவெறிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டதை அந்த அமைப்பு கண்டிக்கவில்லை. இது தொடர்பாக மவுனம் சாதித்து வந்தது.

இதனைக் கண்டிக்கும் வகையில் இதுவரை சாகித்ய அகாடமி விருது பெற்ற பலரும் அந்த விருதை அந்த அமைப்புக்கே திருப்பி அனுப்பி வைத்து வந்தனர். ஒரு சிலர் சாகித்ய அகாடமி பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தனர்.
மேலும் சாகித்ய அகாடமியைக் கண்டித்தும் அந்த அமைப்புக்கு ஆதரவாகவும் பேரணிகளும் நடைபெறன. இதனைத் தொடர்ந்து சாகித்ய அகாடமி அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் எழுத்தாளர் கல்பர்கி கொலைக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டு தீர்மானம் நிறைவேற்றிய சாகித்ய அகாடமி, அத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாமல் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்த எழுத்தாளர்கள் மீண்டும் விருதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சாகித்ய அகாடமி கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த கூட்டம் குறித்து அகாடமியின் செயற்குழு வாரிய உறுப்பினர் கிருஷ்ணசுவாமி நாச்சி முத்து கூறும்போது, எழுத்தாளர் கல்பர்கி கொலையை அகாடமி கடுமையாக கண்டிக்கிறது.
எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. கொலைகளைக் கண்டிப்பதில் அனைத்து எழுத்தாளர்களும் ஒருமனதாக நிற்கிறோம்.
பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போக்கையும் கண்டித்துள்ளோம், அந்த பிரச்சினையையும் எழுப்பியுள்ளோம். விரைவில் சாகித்ய அகாடமியின் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
அரசியல் சாசனம் உத்தரவாதம் அளிக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் எழுத்தாளர்களுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி நிற்கவில்லை என்று குற்றம்சாட்டி சாகித்ய அகாடமியின் அனைத்து பதவிகளையும் துறந்த எழுத்தாளர் கே.சச்சிதானந்தன் இக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications