நாட்டிலேயே முதல் முறை.. ராஜஸ்தான் மழலையர் பள்ளிகளில் இனி சமஸ்கிருதம் கட்டாயம்
ஜெய்பூர்: பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் எழுந்து வருகிறது. அதிலும் பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இதன் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. பீகார் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சமஸ்கிருத மொழிக்கு என்று மாதிரி பள்ளி உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நாட்டிலேயே முதல்முறையாக ராஜஸ்தான் மாநில மழலையர் பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
மத்திய பாஜக அரசு மும்மொழி கல்வி கொள்கை மூலம் இந்தி மொழியை திணிப்பதாக பல்வேறு மாநிலங்களில் புகார் உள்ளது. பல மாநிலங்களில் மும்மொழி கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மறுபக்கம் பாஜக அரசு சமஸ்கிருத மொழிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பதாகவும் புகார் எழுந்து வருகிறது.

சமஸ்கிருதம் கட்டாயம்
கடந்த 10 வருடங்களில் பயன்பாட்டிலேயே இல்லாத சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு தமிழ், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு ரூ.113 கோடி மட்டுமே ஒதுக்கியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசை கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சமஸ்கிருதம் மொழிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் உள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மலையர் பள்ளிகளில் சமஸ்கிருதம் மொழி கட்டாயம் என்கிற நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மழலையர் பள்ளிகளில் சமஸ்கிருதம்
நாட்டிலேயே முதல்முறையாக பாஜக ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில், பிகேஜி, எல்கேஜி, யூகேஜி உள்ளிட்ட வகுப்புகளுக்கு சமஸ்கிருதம் கட்டாயப் பாடம் ஆகியுள்ளது. இது அங்குள்ள அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் மாநில சமஸ்கிருத கல்வித்துறை ஆணையர் பிரியங்கா ஜோத்வட் கூறுகையில், "சமஸ்கிருதம் கட்டாயமாக்குவது தொடர்பான பரிந்துரையை இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே மத்திய அரசுக்கு அனுப்பினோம்.
இதற்கான பாடத்திட்டம், புத்தகம் ஆகியவை தயாரிக்கப்பட்டுவிட்டன. அமைச்சரவையில் இருந்து ஒப்புதல் வழங்கிவிட்டால் பாடத்தை தொடங்கிவிடுவோம்." என்றார். ராஜஸ்தான் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்த சமஸ்கிருத புத்தகங்களுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான என்சிஇஆர்டி ஒப்புதல் வழங்கியுள்ளது.
மீண்டும் மீண்டும்
குழந்தைகளை ஈர்க்கும் வகையில் எளிதாகவும், காமிக்ஸ் வடிவிலும் புத்தகம் அமைக்கப்பட்டுள்ளது என்று ராஜஸ்தான் மாநில கல்வித்துறை கூறியுள்ளது. மாணவர்களுக்கு அடிப்படை மொழியாக்கம், இலக்கணம் பயிற்சி கொடுக்கப்படும். என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநில அரசுப் பள்ளிகளில் உறுதி மொழிக்கு பதிலாக சமஸ்கிருதம் இணைக்கப்பட்டு பிரச்சனையானது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications