தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டுச் சேலையை மிஷல் ஒபாமாவுக்காக நெய்த தெலுங்கானா விஜய்
ஹைதராபாத்: தெலுங்கானாவைச் சேர்ந்த நெசவாளியான நல்லா விஜய் என்பவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவிக்கு பரிசளிக்க தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டுச்சேலையை நெய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார். இந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் நடக்கும் குடியரசு தின விழாவில் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஒபாமாவின் வருகையையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சிலா நகரைச் சேர்ந்தவர் நல்லா விஜய்(27). நெசவாளி. அவர் மிஷலுக்கு தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டுச் சேலையையும், ஒபாமாவுக்கும் தீப்பெட்டிக்குள் மடித்து வைக்கும் சால்வையைும் நெய்துள்ளார்.
60 கிராம் எடை கொண்ட அந்த சேலை 4.5 மீட்டர் நீளமானது. சால்வை 30 கிராம் எடை கொண்டது. மேலும் அது 2 மீட்டர் நீளமானது. சேலை மற்றும் சால்வை மத்திய அமைச்சர் பன்டாரு தத்தாத்ரேயாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அவற்றை அவர் பிரதமர் மோடியிடம் அளித்து ஒபாமாவுக்கும், மிஷலுக்கும் பரிசளிக்குமாறு கேட்டுக் கொள்ள உள்ளார்.
ஒபாமாவின் இந்த இந்திய பயணம் அவருக்கு என்றும் நினைவில் இருக்கும் ஒரு இனிய பயணமாக அமையத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications