சசிகலாவின் அடுத்த காய் நகர்த்தல்.. சென்னை சிறைக்கு மாற்ற பெங்களூர் சிறை அதிகாரியிடம் மனு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளரிடம் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் மத்திய சிறைச்சாலையான பரப்பன அக்ரஹாராவில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Sasikala request Bengaluru jail official to shift her to Chennai jail

அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற பதவியில் சசிகலா இருப்பதால் தமிழக அரசு நடவடிக்கைகளுக்கு தேவையான ஆலோசனைகளை சிறையில் இருந்தபடியே சசிகலா பிறப்பிக்க வேண்டியுள்ளது. மேலும் கர்நாடக மாநில சிறை என்பதால் தனது விருப்பப்படி, விதிமுறைகளை தளர்த்திக்கொண்டு இருக்க முடியவில்லையாம்.

இந்நிலையில், தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளரிடம் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா மனு மீது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்று பரப்பன அக்ரஹாரா சென்ற சசிகலாவின் அக்கா மகனும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான டி.டி.வி.தினகரனிடம் இதுகுறித்து ்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+