கிரிமினல் பின்னணி அமைச்சர்கள் நீக்கம் குறித்து பிரதமர்தான் முடிவெடுக்க முடியும்: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: கிரிமினல் பின்னணி கொண்ட அமைச்சர்களை நீக்குவது குறித்து பிரதமர் மற்றும் மாநிலங்களின் முதல்வர்களே முடிவெடுக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று கோரி மனோஜ் நருலா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பின்னணி கொண்டவர்களை அமைச்சர்களாக நியமிக்கமாட்டோம் என்றுதான் அரசியல் சாசனப்படி பிரதமர் மற்றும் மாநிலங்களின் முதல்வர்கள் உறுதி மொழியேற்கின்றனர்.

அதே நேரத்தில் பிரதமரின் அதிகாரங்களை உச்சநீதிமன்றம் மறுவரையறை செய்ய முடியாது. அதனால் குற்றப் பின்னணி கொண்ட அமைச்சர்களை நீக்கும் முடிவை பிரதமர் மற்றும் முதல்வர்களே எடுக்க முடியும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்து பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சொல்வது என்ன?
- அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றத்தால் முடியாது. அது குறித்துபிரதமர் மற்றும் முதல்வர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
- அதே நேரத்தில் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கிறவர்கள் என்ற அடிப்படையில் குற்ற வழக்குகளை எதிர்கொள்வோரை அமைச்சர்களாக நியமிப்பதை பிரதமர் தவிர்க்கலாம்.
- ஊழல் என்பது தேசத்தின் எதிரி. அரசியல் சாசனத்தின் பாதுகாவலர் என்கிற முறையில் அத்தகைய விரும்பத்தகாத நபர்களை அமைச்சர்களாக நியமிக்காமல் இருக்கலாம்.
- இந்த வழக்கின் விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில், ஒருவர் எம்.பி.யாகிவிட்டாலே அவரை பிரதமர் விரும்பினால் அமைச்சராக நியமிக்க முடியும் என்று வாதிடப்பட்டது.
- இதற்கு பதிலளித்த நீதிபதிகள், தார்மீக அடிப்படையிலும் அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் பொறுப்புணர்வுடனும் பிரதமரும் மாநிலங்களின் முதல்வர்களும் செயல்படுவார்கள் என்று நம்பிக்கை கொள்கிறோம்.
மோடி அமைச்சரவையில் கிரிமினல் பின்னணி
- பிரதமர் மோடி அமைச்சரவையில் கிரிமினல் பின்னணி கொண்ட அமைச்சர்கள் மொத்தம் 14 பேர்.
- மத்திய அமைச்சர் உமாபாரதி மீது மட்டும் 13 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- உமாபாரதிக்கு அடுத்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications