நீதிபதி ஜோசப் நியமனம்... தலைமை நீதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுத்த 4 நீதிபதிகள்!
உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கொலீஜியத்தில் இருக்கும் 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை
Recommended Video

டெல்லி: உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப்பிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கொலீஜியத்தில் இருக்கும் 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்து கோரிக்கை வைத்து இருக்கிறார்கள்.
கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் அமைப்பு அனுப்பிய நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் வழக்கம், ஆனால் இந்த முறை உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப் பெயரை மட்டும் பரிந்துரையில் இருந்து நீக்கும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

அவரது பெயர் மூப்பின் அடிப்படையில் இப்போது வர கூடாது என்று கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் இதற்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்த பிரச்சனை பூதாகரமானது. மத்திய அரசு அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்குகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறியது.
இது பெரிய பிரச்சனையை உருவாக்கியது. நீதித்துறை வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. இந்த நிலையில் சில நாட்கள் கழித்து இதுகுறித்து விவாதம் நடத்த கொலீஜியம் கூடி உள்ளது. கொலீஜியத்தில் உள்ள எல்லா உறுப்பினர்களும் கூடி, ஜோசப் நியமனம் குறித்து விவாதித்தார்கள். ஆனால் அதில் ஜோசப் நியமனத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த சந்திப்பு முடிந்த பின் கொலீஜியத்தில் உள்ள நான்கு மூத்த நீதிபதிகள் கூடி விவாதம் நடத்தி இருக்கிறார்கள். நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் லாகூர், செல்லமேஸ்வரர் ஆகியோர் ஒன்றாக கூடி விவாதம் நடத்தி இருக்கிறார்கள். இவர்கள் இந்த விவாதத்தை முடித்துவிட்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் செல்லமேஸ்வரர் மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதில் ஜோசப் நியமனம் குறித்து அழுத்தம் அளித்துள்ளனர். மீண்டும் அவர் பெயரை பரிந்துரை செய்வதே நேர்மையான முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இதில் கலந்து கொள்ளாத செல்லமேஸ்வரர், தான் பேச வேண்டிய விஷயங்களை கடிதமாக எழுதி அனுப்பி இருக்கிறார்.
இதனால் விரைவில் மீண்டும் கொலீஜியம் கூடும் என்று கூறப்படுகிறது. இதில் நீதிபதிகள் மீண்டும் ஜோசப் நியமனம் குறித்து பரிசீலனை செய்ய அழுத்தம் கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும் பட்சத்தில் தலைமை நீதிபதி மீண்டும் ஜோசப் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்ய வேண்டிவரும். அப்படி செய்தால் மத்திய அரசு அதை ஏற்றுக் கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்திற்கு மொத்தம் 31 நீதிபதிகள் தேவை. இப்போது 24 நீதிபதிகள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த நிலையில் நீதிபதி செல்லமேஸ்வரர் தற்போது பணி ஓய்வு பெற இருக்கிறார்.இதனால் நீதிபதிகளின் எண்ணிக்கையில் இன்னும் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications