குற்றவாளிகளுடன் தொடர்பு: வழக்கை தள்ளுபடி செய்ய கோரிய சிபிஐ இயக்குநர் கோரிக்கை நிராகரிப்பு-கோர்ட்!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் குற்றவாளிகளை சந்தித்த சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்காவை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் குற்றவாளிகளை தமது வீட்டில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா சந்தித்தார் என்று என்.ஜி.ஓ நிறுவனம் ஒன்று பொதுநலன் வழக்குத் தாக்கல் செய்தது. இந்த அமைப்புக்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடி வருகிறார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது தமது குற்றச்சாட்டுகளுக்கு ஆதரமாக ரஞ்சித் சின்கா வீட்டு வருகைப் பதிவேட்டையும் அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் தம் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்; வருகைப் பதிவேட்டில் 90% போலியான பதிவுகள் என்று சின்காவும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், சின்கா வீட்டு வருகைப் பதிவேட்டை கொடுத்த நபரை தெரிவிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷனுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அப்போது, சிபிஐ இயக்குநர் இல்ல வருகைப் பதிவேட்டை அளித்தவர் பெயரை வெளியிட இயலாததற்கு மன்னிப்பு கோரியது வழக்கு தொடர்ந்த என்.ஜி.ஓ. அமைப்பு. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், சிபிஐ இயக்குநர் இல்ல வருகைப் பதிவேடு விவகாரத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருத்தை கேட்க முடிவு செய்துள்ளது.
மேலும் வருகைப் பதிவேட்டை கொடுத்தவர் விவரத்தை வெளியிட வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது, அதே நேரத்தில் தம் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற ரஞ்சின் சின்காவின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது ரஞ்சித் சின்காவுக்கு பெரும் பின்னடைவாகும்.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications