முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கு எதிராக தமிழகம் வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 3–ல் விசாரணை!
டெல்லி: முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சிக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது ஜூலை 3-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது.
முல்லைப் பெரியாறு குறுக்கே புதிய அணை கட்டுவதில் கேரளா மும்முரமாக இருக்கிறது. தற்போதைய அணைக்கு 500 அடிக்கு கீழ் உள்ள வல்லக்கடவிற்கு செல்லும் பாதையில் 15 இடங்களில் இதற்காக ஆய்வு நடத்தப்பட இருக்கிறது.

மத்திய வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் இந்த பணிகள் நடைபெற உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மே மாதம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில், முல்லைப் பெரியாறு பகுதியில் கேரள அரசு புதிதாக அணை கட்டுவதாக கூறப்படும் பகுதியில் ஆழ்துளை எந்திரங்களை கொண்டு பணிகளை தொடங்கி இருப்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அவமதிக்கும் செயல். இதனால் தேசிய வனவிலங்கு வாரியம் 31.12.2014 அன்று வழங்கிய அனுமதியின் அடிப்படையில் கேரள அரசு முல்லைப்பெரியாறு பகுதியில் புதிய அணையை கட்டத் தொடங்குவதற்கான ஆய்வு பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை கடந்த மாதம் 12-ந் தேதி மறுத்த தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச், இம் மனுவை உடனடியாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை முடிந்ததும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.
தற்போது இந்த மனு ஜூலை 3-ந் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications