மத்திய உள்துறை செயலர் கோயல் திடீர் மாற்றம்- புதிய செயலராக ராஜீவ் மெஹ்ரிஷி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய உள்துறை செயலாளரான கோயல் திடீரென மாற்றப்பட்டு புதிய செயலராக ராஜீவ் மெஹ்ரிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் நிதி அமைச்சகத்தில் செயலராக இருந்தவர் நிதி மெஹ்ரிஷி. அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுவதாக இருந்தது.

Senior Bureaucrat Rajiv Mehrishi Will Be New Home Secretary

இந்த நிலையில் உள்துறையின் புதிய செயலராக ராஜீவ் மெஹ்ரிஷி நியமிக்கப்பட்டிருக்கிறார். உள்துறை செயலராக இருந்த கோயல் மீது இந்தியா- பாகிஸ்தான் தேசிய ஆலோசகர்களிடையேயான பேச்சுவார்த்தை விவகாரம், நாகா ஒப்பந்தம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்துடன் கலந்து ஆலோசிக்கவில்லை உள்ளிட்ட பிரச்சனைகளில் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோயலும் 2 ஆண்டுகளுக்கு முன்னரே பணி ஓய்வு பெற விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் தற்போது கோயல் வெளியேற்றப்பட்டு ராஜீவ் மெஹ்ரிஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

கோயலுக்கு முன்னர் அனில் கோஸ்வாமி உள்துறை செயலராக இருந்தார். ஆனால் சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடவடிக்கையில் தலையிட்டதாக கூறி அவரை பதவி விலகுமாறு மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது.

ஒரே ஆண்டில் இந்திய உள்துறைக்கு 3வது செயலர் ராஜிவ் மெஹ்ரிஷி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+