கள்ளக் காதல்: விமானப் படை அதிகாரியை வெட்டி 16 கூறு போட்ட சக ஊழியர்!
கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப் படை அதிகாரி ஒருவரை சக ஊழியர் குடும்பத்துடன் சேர்ந்து வெட்டி கூறு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப்படை அதிகாரியை சக ஊழியர் ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து வெட்டி கொலை செய்து உடலை 16 கூறுகளாக துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் விமான படை தளத்தில் விமானப்படை கார்போரேல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார் விபன் சுக்லா(27). 2014ம் ஆண்டு பஞ்சாப் பதிண்டா விமானப் படை தளத்தில் விபன் சுக்லா பணியில் சேர்ந்துள்ளார்.
அவர் தன் மனைவி இல்லாமல் தனியாக வசித்து வந்துள்ளார். பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே சார்ஜெண்ட் அதிகாரியான சுலேஷ் குமாரின் மனைவி அனுராதாவுக்கும் விபன் சுக்லாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதலி கர்ப்பம்
இதில் அனுராதா கர்ப்பமானார். இதனால் கணவர் சுலேஷ் குமாரை டைவர்ஸ் செய்துவிட்டு விபன் சுக்லாவை திருமணம் செய்யவும் திட்டமிட்டார் அனுராதா. ஆனால் விபன் சுக்லா கருவை கலைக்குமாறு கூறி அனுராதாவை கைவிடுட்விட்டார்.

குடும்பத்தில் குழப்பம்...
இந்த விவகாரத்தால் சுலேஷ் குமார் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. சுலேஷ் குமார், அனுராதா மற்றும் அனுராதாவின் சகோதரர் பூஷன் மூவரும் விபன் சுக்லாவை போட்டுத் தள்ளுவது என சதித் திட்டம் போட்டனர்.

சுக்லாவை வரவழைத்து..
இந்த திட்டத்தின்படி கடந்த 8ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சுக்லாவை உதவி செய்யுமாறு தமது வீட்டுக்கு அனுராதா அழைத்திருக்கிறார். அங்கு பதுங்கியிருந்த சுலேஷ் குமார், அனுராதாவின் சகோதர் பூஷன் ஆகியோர் விபன் சுக்லாவை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

பெட்டியில் அடைத்து வைப்பு
சுக்லாவின் உடலை ஒரு பெட்டியில் வைத்து பூட்டியது சுலேஷ்குமார் குடும்பம். பின்னர் கடந்த பிப்ரவரி 19-ந் தேதியன்று சுக்லாவின் உடலை 16 கூறுகளாக வெட்டி 6 பாலித்தீன் பைகளில் போட்டு அடைத்துவிட்டு புதிய வீட்டுக்கு போய்விட்டனர்

சுக்லாவின் மனைவி போலீசில் புகார்
இதனிடையே கணவரை காணவில்லை என்று கடந்த 9ம் தேதி விபன் சுக்லாவின் மனைவி கும்கும், பலுவானா காவல் நிலையத்தில புகார் அளித்துள்ளார். இதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் மோப்ப நாய் உதவியுடன் சுலேஷ் குமார் வசித்த வீட்டின் அலமாரி மற்றும் ஃப்ரிட்ஜில் இருந்து 16 பிளாஸ்டிக் பைகளில் இருந்து சுக்லாவின் உடல் மீட்கப்பட்டது.

குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது
இதையடுத்து சுலேஷ் குமார், அவரது மனைவி அனுராதா மற்றும் சகோதரர் பூஷன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக் காதல் விவகாரத்தில் விமானப் படை அதிகாரியை சக ஊழியரே வெட்டி கூறாக்கிய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications