பிரியாணியில் விஷம் கலந்து கோழிப்பண்ணை ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை.. தெலுங்கானாவில் அதிர்ச்சி!
தெலுங்கானாவில் பிரியாணியில் விஷம் கலந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானாவில் பிரியாணியில் விஷம் கலந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடன்தொல்லையால் தமிழகத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானாவிலும் இதுப்போன்ற நிலைமை அரங்கேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் யாதத்ரி-புவனகிரி மாவட்டம் ராஜாபேட்டை சேர்ந்தவர் பால ராஜ். 44 வயதான இவருக்கு திருமலா என்ற மனைவியும் மூன்று குழந்தைகளுக்கும் உள்ளனர்.

திறக்கப்படாத வீடு
பால்ராஜ் அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பால்ராஜ் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.

7 பேர் பிணமாக கிடந்தனர்
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது பால்ராஜ் உள்ளிட்ட 7 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் விசாரணை
தகவலறிந்து வந்த போலீசார் 7 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரியாணியில் விஷம்
பிரியாணியில் விஷம் கலந்து வீட்டில் உள்ள 7 பேரும் சப்பிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பால்ராஜ் அவரது மனைவி திருமலா குழந்தைகள் சிவானி, சிந்து, பன்னி மற்றும் மாமனார் பாலநரசய்யா, பரத்தம்மா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

பூச்சி கொல்லி மருந்து
ஆனால் எதற்காக தற்கொலை செய்துகொண்டனர் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. கோழிப்பண்னையில் பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்தி அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஏதேனும் காரணமா?
கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது மர்ம மரணமா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தெலுங்கானாவில் அதிர்ச்சி
7 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications