"மைனர் மனைவியுடன் உறவு கொள்வதும் பலாத்காரம்தானே?”- உச்ச நீதிமன்றம் கேள்வி!
டெல்லி : மனைவியின் அனுமதி இல்லாமல் உறவு கொள்வது எப்படிக் குற்றமோ அதே போல் மைனர் பெண் மனைவி என்பதாலேயே அப்பெண்ணிடம் உறவு கொள்வதும் பலாத்காரத்திற்கு சமமான ஒன்றுதானா என்று உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வியை எழுப்பியுள்ளது.
"இண்டிபன்டென்ட் தாட்" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.

அம்மனுவில், "15 வயது முதல் 18 வயது வரை உள்ள ஒரு சிறுமியை திருமணம் செய்த நபர் ஒருவர் அப்பெண் தனது மனைவியாகவிட்டதால் உறவு கொள்வது ஏற்புடையதல்ல. மைனர் மனைவியுடன் உறவு கொள்வதும் பலாத்காரமே என உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.
இந்திய தண்டனைச் சட்டம் 375 ன் கீழ் ஒரு ஆண் தன் மனைவிக்கு 15 வயதுக்கு மேல் ஆகியிருந்தால் அவருடன் உறவு கொள்வது பலாத்காரமாகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் சட்டப் பிரிவுகள் 14,15, 21 ஆகியனவற்றிற்கு எதிரானதாக உள்ளது. இந்த சட்டத்தில் தேவையான திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375, பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள பாக்ஸோ சட்ட விதிமுறைகளை மீறுவதாகவும் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுநல வழக்கு நேற்று நீதிபதி மதன்.பி.லோகூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசிய மகளிர் ஆணையம் இவ்வழக்கில் தேவையான விளக்கத்தை மனுதாரருக்கு அளிக்குமாறு அறிவுறுத்தியதுடன், மைனர் பெண் மீதான உறவு பலாத்காரமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications