6 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்து தலையில் கல்லை போட்டு கொன்ற கயவர்கள்! கர்நாடகாவில் சோகம்
மங்களூரு: கர்நாடக மாநிலம், குந்தாபுரா அருகே, 6 மாத கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா பீஜாடி கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா மொகவீரா (30). இவருக்கு திருமணம் ஆகி இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவர் மல்பே மீன்பிடி துறைமுகத்தில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்திராவின் கணவர் வாரத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் இந்திரா, தனது குழந்தை, அக்காள் கிரீஜா, அக்காள் மகள் பிரதீபா ஆகியோருடன் வசித்து வந்தார். இதற்கிடையே இந்திரா 2வது முறையாக கர்ப்பமடைந்தார். தற்போது அவர் 6 மாத கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை கிரீஜா, தனது மகன் பிரதீபாவுடன் வெளியே சென்றிருந்தார். இதனால் வீட்டில் இந்திரா, தனது குழந்தையுடன் இருந்தார். இதற்கிடையே வெளியே சென்றிருந்த கிரீஜா, மகளுடன் இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது இந்திரா தலை நசுங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளார்.
அதன் அருகே இந்திராவின் குழந்தை குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிரீஜா கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குந்தாபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, கர்ப்பிணியான இந்திராவின் தலையில் மர்மநபர்கள் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை ஓட்டியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதையடுத்து கொலையான இந்திராவின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குந்தாபுரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இந்திராவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கர்ப்பிணியான இந்திராவின் தலையில் மர்மநபர்கள் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனையில் இந்திராவை மர்மநபர்கள் கற்பழித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்திரா அரை நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார் என்றனர்.
இதனிடையே, சம்பவம் நடந்த நேரத்தில், 4 வாலிபர்கள், இந்திரா வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடியதை பக்கத்து வீட்டு பெண்மணி பார்த்துள்ளார். அதில் ஒருவரை அந்த பெண்மணி, போலீசாருக்கு அடையாளங்காட்டியதை தொடர்ந்து, அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதுவரை அந்த நபரின் பெயர் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications