பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது: சித்தராமையா
பெங்களூர்: காவிரி பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதுபற்றி சித்தராமையாவிடம் பெங்களூரில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:

‘‘காவிரி பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைப்பது சாத்தியம் ஆகாது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி இருப்பதால், கர்நாடகத்துக்கோ, மாநில மக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதுபற்றி மாநில மக்கள் கவலைப்படவும் தேவையில்லை. காவிரி பிரச்சினையை அடிக்கடி எழுப்புவதையே தமிழக அரசு வேலையாக கொண்டு உள்ளது. இதனை கர்நாடக மக்கள் கண்டுகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை நான், கர்நாடக எம்.பி.க்கள், அமைச்சர்கள் சந்தித்து பேசும்போது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை சுட்டிக்காட்டினோம்.'' இவ்வாறு முதல்வர் சித்தராமையா கூறினார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா!












Click it and Unblock the Notifications