இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்.. சித்தராமையா வேண்டுகோள்
பெங்களூர்: காவிரி விவகாரத்தில் இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று காலை கன்னடர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கர்நாடக டிஜிபி, தமிழக டிஜிபியை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

தமிழகத்தில் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி உறுதியளித்துள்ளார். அதேபோல கர்நாடகாவில் தமிழர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இதுகுறித்து போலீஸ் டிஜிபி மற்றும் பெங்களூர் போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெங்களூரில் தமிழக இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். எனவே இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா கோரியுள்ளார். மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கன்னட மக்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications