ம.பி. உஜ்ஜெய்னி கும்பமேளாவில் கலந்து கொள்ள வருகிறார் மைத்ரிபால சிறிசேன
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னியில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்தியா வருகை தர உள்ளார்.
இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற மைத்ரிபால சிறிசேன கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4 நாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2-வது முறையாக இந்தியாவுக்கு அவர் வருகை தர உள்ளார்.

மத்திய பிரதேச ஆளும் பாஜகவின் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் விடுத்த அழைப்பை ஏற்று வரும் 14-ந் தேதி உஜ்ஜெய்னி கும்பமேளாவில் மைத்ரிபால சிறிசேன பங்கேற்க உள்ளார்.
இக்கும்பமேளா நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை மைத்ரிபால சிறிசேன சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்த இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications